For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயிருக்கு போராடும் பிஞ்சு சிறுவன் .. இருதயத்தில் பிரச்சன.. நீங்கள் நினைத்தால் இவருக்கு உதவலாம்!

இதய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் குழந்தையின் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவியை உடனே செய்திடுங்கள்!

சென்னை: இதய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் குழந்தையின் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவியை உடனே செய்திடுங்கள்!

அணில் குமார் பீகார் மாவட்டம் நவாடா பகுதியை சேர்ந்தவர். இவரின் மனைவி பூனம் கயா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர்களின் குழந்தைதான் தற்போது உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறது. அணில் குமார் சென்னையில் கட்டுமான வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்.

சொற்ப வருமானத்தில் அவர் தனது குடும்பத்தை கவனித்துக்கொண்டு உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்தான் தங்களின் குழந்தை யுவராஜுக்கு இருதயத்தில் பாதிப்பு இருப்பதை இவர்கள் தெரிந்து கொண்டனர். பதறிப்போன அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் தனது குழந்தைக்கு அவர் சென்னையிலேயே வைத்து சிகிச்சை வழங்கி வருகிறார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இவர் மருத்துவர்களை அணுகி இருக்கிறார்.

பீகாரை சேர்ந்தவர் என்பதால் தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்களுக்கு இவர் தகுதி கிடையாது. குழந்தை யுவராஜூக்கு இதயத்தில் Tetrology of Fallot, subclavian artery ஆகிய குறைபாடுகள் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக குழந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

உடனடியாக யுவராஜுக்கு Cardiac Catheterisation /CT angiography செய்ய வேண்டும். அதன்பின் மொத்தமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை கூட ஏற்படலாம். ஆனால் இதற்கான பணம் அவர்களிடம் இல்லை.

இதற்கு மொத்தம் 2,25,000 ரூபாய் செலவு ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஐசியூ வார்டில் யுவராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். நீங்கள் நினைத்தால் இவருக்கு உதவி செய்யலாம். நீங்கள் கொடுக்கும் 100 ரூபாய் கூட இவரின் உயிரை காக்கும்.

உங்களால் முடிந்த உதவியை, இந்த லிங்கை கிளிக் செய்து உடனே வழங்கிடுங்கள்.. ஒரு உயிரை காத்திடுங்கள்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X