ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கதவை திறந்து உள்ளே போனா.. 40 பேரு.. எல்லாம் ஓட்டு.. மொய்த்தெடுக்கும் வேட்பாளர்கள்!

ஒசூரில் ஒரே குடும்பத்தில் 40 பேர் உள்ளதால் வேட்பாளர்கள் தொடர்ந்து படையெடுத்து வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    40 வாக்காளர்களை கொண்ட பெரிய குடும்பம்-வீடியோ

    ஓசூர்: எல்லா வேட்பாளருக்கும் அந்த ஒரே ஒரு வீட்டின் மீதுதான் கண்ணெல்லாம்! ஓட்டு கேட்க ஒரு ஊருக்குள் சென்றுவந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும்போல அந்த வீட்டுக்குள் சென்று வரும் வேட்பாளர்களுக்கும்!

    ஓசூர் அருகே எட்டிப் பள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் அந்த ஒரே ஒரு வீடுதான்! காரணம் அது ஒரு கூட்டுக்குடும்பம்.. அதாவது குடும்பத்தில் 40 பேர் இருக்கிறார்களாம்!

    குடும்பத்தின் மூத்தவரான குண்டே கவுடு. இவர் தனது சகோதரர்கள் முனுசாமி, சாத்தப்பா மற்றும் இரு சகோதரிகளுடன் இதே வீட்டில் பிறந்தது முதல் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.

    விஜய் மல்லையா முயற்சிக்கு பெரும் அடி.. கைவிட்டது பிரிட்டன் ஹைகோர்ட் விஜய் மல்லையா முயற்சிக்கு பெரும் அடி.. கைவிட்டது பிரிட்டன் ஹைகோர்ட்

    10 கிலோ அரிசி

    10 கிலோ அரிசி

    இந்த கூட்டுக் குடும்பத்திற்கு 150 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறதாம். தினமும் 10 கிலோ அரிசி சமைக்கிறாங்களாம். வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வெளியில் வாங்குவதே இல்லையாம். எல்லா காய்கறிகளையும் இவர்களே தோட்டத்தில் பயிரிட்டு கொள்கிறார்களாம்!

    ஒத்துமை

    ஒத்துமை

    "நாங்க இதுவரைக்கும் சொத்துக்களை பிரிச்சது இல்லை.. எங்கள் பிள்ளைங்களும் பிரிக்க மாட்டாங்க. சொந்தத்துக்குள்ளேயே பெண் கொடுத்தும், எடுத்தும் கொள்வதால் நாங்கள் ஒத்துமையா இருக்கிறோம்" என்று சொல்கிறார்கள்.

    வேட்பாளர்கள்

    வேட்பாளர்கள்

    இதெல்லாம் கேட்க நமக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றாலும் வேட்பாளர்களுக்கு இப்போது இந்த வீட்டின் மீது தான் கண்ணெல்லாம்! ஊருக்குள் 300 ஓட்டுக்கள் இருந்தாலும் ஒரே வீட்டுக்குள் இருக்கிறது 40 ஓட்டுக்கள் ஆச்சே..அதான் மொத்தமாக அள்ளவே ஆர்வம் காட்டி வருகிறார்கள். வீட்டில் இருப்பது 60 பேர் என்றாலும் ஓட்டு போடும் உரிமை இருப்பதோ வெறும் 40 பேருக்குதானாம்!

    அமெரிக்கா, ரஷ்யா

    அமெரிக்கா, ரஷ்யா

    இந்த வீட்டின் மேலும் சில நபர்கள் ரஷ்யா, அமெரிக்காவில் இருக்கிறார்களாம். அவர்களுக்கும் இங்கு ஓட்டு இருக்கிறது. அதனால் அவர்களையும் ஓட்டு போட கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் சில வாரங்களாக இந்த வீட்டுக்கு வேட்பாளர்கள் போவதும், வருவதுமாக இருக்கிறார்களாம்!

    வாக்களிப்போம்

    வாக்களிப்போம்

    "இத்தனை பேர் ஓட்டு கேட்டு வர்றாங்களே.. அதுக்கு என்ன நீங்க அவங்ககிட்ட என்ன சொல்றீங்க?" என்று கேட்டால், "நல்ல வேட்பாளர்களை பார்த்து வாக்களிப்போம்" என்று சொல்லி வருகிறோம் என்கிறார்கள்.

    English summary
    40 members are in an one family near Hosur. So the Candidates come to this house to get 40 votes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X