ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. !

    ஓசூர்: ஓசூர் அருகே டிப்பர் லாரி - கார் மோதிக் கொண்ட சாலை விபத்தில் கார் தீப்பற்றி எரிந்து ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம் திட்டமிட்ட கொலையென போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானமாவு என்னுமிடத்தில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி டிப்பர்லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணித்த ஒரு பெண் மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    தனிப்படை

    தனிப்படை

    இந்த நிலையில், தீப்பற்றி எரிந்த காரில் எச்.செட்டிப்பள்ளியைச் சேர்ந்த ஓட்டுநர் முரளி என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா தனிப்படை அமைத்து விசாரித்து வந்தார்.

    மதுரை கூலிப்படை

    மதுரை கூலிப்படை

    இதனிடையே டிப்பர் லாரி ஓட்டுநர் பிடிப்பட்டுள்ளார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக மதுரை கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்பட்டது.

    ரசாயனம்

    ரசாயனம்

    இதன்படி காரின் மீது டிப்பர் லாரியால் மோதி, தீப்பற்றக் கூடிய இரசாயனத்தை காரின் மீது ஊற்றி சாலை விபத்தைப் போல சித்தரிக்க முயற்சி நடந்தது. அப்போது, காரினுள் இருந்த பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார், ஓட்டுநர் உடல்கருகி பலியானது தெரியவந்துள்ளது.

    விசாரணை

    விசாரணை

    சாலை விபத்தை போல் காட்சியளித்த இச்சம்பவத்தில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், போலீசார் மதுரை கூலிப்படையை சேர்ந்த ஓட்டுநர் மகாராஜாவிடம் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    English summary
    There is a twist in the accident which was held in Hosur. The car driver was murdered and portrayed the incident as accident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X