ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா மீண்டும் ஒரு கூவத்தூர் கூத்து.. ஓசூரில் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்படும் கவுன்சிலர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓசூரில் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்படும் கவுன்சிலர்கள் - வீடியோ

    ஓசூர்: ஓசூர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்களை பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை சொகுசு விடுதியில் தங்க வைப்பதற்காக தனி பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர்.

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் வழக்கத்துக்கு மாறாக ஆளும் கட்சிக்கு சரிசமமாக எதிர்க்கட்சியான திமுக கூட்டணியும் நிறைய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். ஓசூரில் 16 வார்டுகள் உள்ளன. அதில் அதிமுக 8, திமுக 6, தேமுதிக 1, சுயேச்சை 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றனர்.

    ஆச்சரியம்.. ஆனால் உண்மை.. ஒரே மேடையில் திமுக - பாமக கை கோர்ப்பு.. சென்னை அருகே பரபரப்பு ஆச்சரியம்.. ஆனால் உண்மை.. ஒரே மேடையில் திமுக - பாமக கை கோர்ப்பு.. சென்னை அருகே பரபரப்பு

    வலையில் சிக்க வைக்க

    வலையில் சிக்க வைக்க

    இந்த நிலையில் திமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. அதன்படி ஒரு அதிமுக கவுன்சிலரை திமுக தங்கள் வலையில் சிக்க வைத்துவிட்டதாக தெரிகிறது.

    கவுன்சிலர்

    கவுன்சிலர்

    இதையறிந்த அதிமுகவினர் அந்த கவுன்சிலரை திமுகவிடம் இருந்து மீட்டு தனிப்பேருந்தில் சொகுசு விடுதிக்கு அழைத்து சென்றனர். அதேபோல் மற்ற அதிமுக கவுன்சிலர்கள், தேமுதிக கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 9 பேர் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    விடுதிக்கு

    விடுதிக்கு

    ஒன்றிய, மாவட்ட உள்ளாட்சித் தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்ய விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக வேட்பாளர்கள் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஜெ. மறைவுக்கு பிறகு

    ஜெ. மறைவுக்கு பிறகு

    இதை பார்க்கும் போது ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா முதல்வராக பதவியேற்க இருந்த போது அதிமுக எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது நடந்த கூத்துகளை தமிழக மக்கள் மறக்க முடியாது.

    English summary
    ADMK councilors are taking to luxury hotels in Hosur panchayat as to avoid horse trading by opposition.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X