Just In
ஒசூரில் நடந்த பாஜக கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரின் செல்போன் திருட்டு?
ஒசூர்: ஓசூரில் நடந்த பாஜக கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் செல்போன் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாஜக சார்பில் ஒரே நாடு, ஒரே சட்டம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி கலந்து கொண்டு பேசினார்

இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரான பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டார்.
இந்நிலையில் பாலகிருஷ்ணன் ரெட்டியின் செல்போன் இந்த கூட்டத்தில் மாயமானது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செல்போனை யாரேனும் திருடியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!