ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2021-இல் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், திராவிட அரசியலுக்கும்தான் போட்டி.. அர்ஜூன் சம்பத் சவால்

Google Oneindia Tamil News

ஓசூர்: நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவார். வரும் சட்டமன்ற தேர்தலில் ஆன்மீக அரசியலா திராவிட அரசியலா இதுதான் போட்டி என ஓசூரில் இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    2021-இல் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், திராவிட அரசியலுக்கும்தான் போட்டி.. அர்ஜூன் சம்பத் சவால்

    ஓசூரிலுள்ள ஸ்ரீமஹாவாராகி அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அங்கு சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அவர் கூறுகையில் ரஜினிகாந்த் கிருஷ்ணகிரி மண்ணின் மைந்தன் இந்த மாவட்டத்தில் உள்ள நாச்சிகுப்பத்தில் பிறந்தவர். அவர் தமிழர் இல்லை எனக் கூறி வருகிறார்கள். அதற்கு காரணம் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் கொள்கைகளை கொண்டு வந்துள்ளார்.

    திடீர்னு பாடுவார்.. இல்லாட்டி கவிதை படிப்பார்.. இப்ப டக்குனு கடலுக்குள்ளயே போயிட்டாரே.. ஜெயக்குமார்திடீர்னு பாடுவார்.. இல்லாட்டி கவிதை படிப்பார்.. இப்ப டக்குனு கடலுக்குள்ளயே போயிட்டாரே.. ஜெயக்குமார்

    திராவிட இயக்கங்கள்

    திராவிட இயக்கங்கள்

    அந்த ஆன்மீக அரசியல் கொள்கைகள் இந்த இரண்டு திராவிட இயக்கங்களையும் வீழ்த்தி சிஸ்டத்தை சரி செய்து தமிழகத்தில் வரும் 2020 அல்லது 2021 சட்டமன்ற தேர்தலில் வரவுள்ளது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஆன்மீக அரசியலா, திராவிட அரசியலா இதுதான் போட்டியாக உள்ளது. நிச்சயமாக ரஜினி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவார். ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம், இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை.

    ரஜினியின் அறைகூவல்

    ரஜினியின் அறைகூவல்

    இது ரஜினிகாந்தின் அறைகூவல். அவர் தன்னுடைய பிரச்சாரத்தை திட்டமிட்டுள்ளார். அந்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி மாற்றம், புரட்சியை கொண்டு வரவுள்ளது. அந்த ஆன்மீக அரசியல் புரட்சியில் தமிழகம் மிகப்பெரிய மலர்ச்சியை பெறவுள்ளது. அப்போது இந்த திராவிட இருள் மற்றும் திராவிட மாயையிலிருந்து தமிழகத்தை ஆன்மீக அரசியல் மீட்கும்.

    முக ஸ்டாலின்

    முக ஸ்டாலின்

    திமுகவிலிருந்து முக முத்துவிற்காக எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார். முக ஸ்டாலினுக்காக வைகோ வெளியேற்றப்பட்டார். திமுக ஒரு குடும்ப கட்சியாக மாறிவிட்டது. திமுகவில் உள்கட்சி தேர்தலே நடப்பது கிடையாது. அவர்களது குடும்பம் முழுக்க பதவியில் உள்ளனர். மகளிர் அணி என்றால் கனிமொழி. இளைஞர் அணி என்றால் உதயநிதி, இதுபோன்று திமுக அவர்களது குடும்ப கட்சியாக உள்ளது.

    ஜனநாயகம்

    ஜனநாயகம்

    அங்கு ஜனநாயகம் கிடையாது. கந்த சஷ்டியை அவமானப்படுத்திய கருப்பர் கூட்டத்தை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. அப்படி என்றால் இவர்களுக்குள் எப்படியான உறவு உள்ளது என அனைவருக்கும் தெரியும். திமுகவில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை. அது குடும்ப கட்சியாகவும், சாராய அதிபர்களின் கட்சியாகவும் மாறிவிட்டது. தமிழகத்தில் திராவிட இயக்கங்கள்தான் லஞ்ச ஊழல், எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஆகவே ஆன்மீக அரசியல்தான் இதற்கு மாற்று, அது வரும் 2021 இல் வரும் என்றார்.

    English summary
    Arjun Sampath says that Rajinikanth will do transform in Politics. There will be competition for Anmeega Arasiyal and Dravida Arasiyal in 2021 Assembly elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X