ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவுக்கு பீகார் வெற்றியானது தமிழகத்திலும் தொடரும்.. எல் முருகன் பகீர் பேச்சு

Google Oneindia Tamil News

ஓசூர்: எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை தொடரும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் ஓசூரில் பேசினார்.

Recommended Video

    பாஜகவுக்கு பீகார் வெற்றியானது தமிழகத்திலும் தொடரும்.. எல் முருகன் பகீர் பேச்சு

    ஒசூர் காமராஜ் காலணியில் வேல் யாத்திரை பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசினார்.

    அப்போது பேசிய அவர் இந்த வெற்றி வேல் யாத்திரை எதற்காக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நமது தமிழ் கடவுள் முருக பெருமானை அவமானப்படுத்துவார்கள்.

    பீகாரை தட்டி தூக்கிய பாஜக.. முஸ்லீம் வாக்குகள்தான் காரணமா.. நிதிஷ் பீகாரை தட்டி தூக்கிய பாஜக.. முஸ்லீம் வாக்குகள்தான் காரணமா.. நிதிஷ்

    கலாச்சாரம்

    கலாச்சாரம்

    அதனைப் பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருக்க முடியுமா? எந்த ஒரு பாஜககாரனும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். நமது கடவுளை, நமது தமிழ் மொழியை, நமது பண்பாட்டை, நமது கலாச்சாரத்தை, நமது இந்து பெண்களை அவமானப்படுத்துவார்கள்.

    கொள்கை

    கொள்கை

    அதனை பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருப்பதா? பாஜக தொண்டர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. பல தியாகங்களை நாம் செய்துள்ளோம். பாரதிய ஜனதா கட்சி எந்தத் தடையை கண்டும் அஞ்சப் போவதில்லை. நாம் எடுத்துக் கொண்ட கொள்கையிலும் பணியிலும் நமக்கு என்றும் தொய்வில்லை.

    கைது

    கைது

    எனவே இந்த வேல் யாத்திரை நிச்சயமாக எத்தனை தடைகள் வந்தாலும், டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும். இந்த பயணம் ஓயப்போவதில்லை என்று பேசினார். பேசிய பின் போலீசார் முருகன் மற்றும் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    பாஜகவுக்கு வெற்றி

    பாஜகவுக்கு வெற்றி

    இதில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர், 9 மணி அளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், பீகார் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்தது மிகப்பெரிய வெற்றி.

    மாநிலங்கள்

    மாநிலங்கள்

    அது மட்டுமில்லாமல் தெலுங்கானா இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறது. அதே போல் மற்ற மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியானது தமிழகத்திலும் தொடரும் என்று தெரிவித்தார்.

    English summary
    Tamilnadu BJP President L Murugan says that Vel Yatra will be continue as scheduled.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X