ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆடு, மாடையெல்லாம் பிள்ளையா நினைக்கறீங்களே.. மனிதர்களிடம் ஜாதி பார்ப்பது ஏன்.. ரஞ்சித் ஆதங்கம்

ஆணவ கொலைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

ஓசூர்: "ஆடு, மாடு, நாய் போன்றவற்றை தன்னுடைய பிள்ளையாக நினைத்து வளர்க்கும் மனிதர்கள், அவர்களோடு வாழ்பவர்களை ஜாதி பார்ப்பது ஏன் என இயக்குனர் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓசூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்டு நந்திஷ் - சுவாதியின் ஆணவ படுகொலைக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு பலமாக எழுந்து வருகிறது.

சுவாதியின் குடும்பத்தினரே இருவரையும் கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி சென்று ஆணவ படுகொலை செய்துள்ளதாகவும் கூறப்பட்டு இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது.

2 நாளா மின்சாரம் இல்லை.. இனியும் வருமான்னு தெரியாது.. கஜாவால் நிலைகுலைந்த திருச்சி! 2 நாளா மின்சாரம் இல்லை.. இனியும் வருமான்னு தெரியாது.. கஜாவால் நிலைகுலைந்த திருச்சி!

கூட்டாக வேண்டுகோள்

கூட்டாக வேண்டுகோள்

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித், உடுலை சங்கரின் மனைவி கெளசல்யா, ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நந்திஷ் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் சொன்னார்கள். ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் இவர்கள் மூவருமே கூட்டாக வேண்டுகோள் விடுத்தார்கள்.

தண்டனை வேண்டும்

தண்டனை வேண்டும்

பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாலகிருஷ்ணன், "இந்த கொலை மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற கொலைகள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருக்க ஆவண படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும், தூக்கு தண்டனையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இந்த விஷயத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மகனை இழந்து வாடும் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம், வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

ஆடு, மாய், நாய்

ஆடு, மாய், நாய்

அவரை தொடர்ந்து பா. ரஞ்சித் பேசும்போது, "தமிழ் சமூகம் ஜாதி என்ற கட்டுக்குள் கொண்டு வருவது வேதனை அளிக்கிறது, ஏதோ ஒரு கொலை என்று இந்த ஆணவ படுகொலைகளை நாம் கடந்து செல்ல முடியாது. ஆனால் இதை அப்படித்தான் கடந்து சென்று விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது ஆடு, மாடு, நாய் போன்றவற்றை தன்னுடைய பிள்ளையாக நினைத்து வளர்க்கும் மனிதர்கள் அவர்களோடு வாழ்பவர்களை ஜாதி பார்ப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

தனி சட்டம் வேண்டும்

இதனைத் தொடர்ந்து பேசிய கவுசல்யா, "தமிழகத்தில் ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க வேண்டும் இதுவரை 185 ஆணவ படுகொலைகள் நடந்துள்ளன. ஆனால் தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடக்கவில்லை என்று கூறுகிறார்கள். எனவே இதனை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் தமிழகத்தில் ஆளும் எடப்பாடி அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Direcor Ranjith urges a separate law must be passed to prevent the Honour Murder
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X