ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக தேர்தல்.. பாயும் கர்நாடக பணம்.. ரூட் போடும் அரசியல் புள்ளிகள்.. சிக்கிய "ஆனேக்கல் ஆனந்த்"

Google Oneindia Tamil News

ஒசூர்: ஓசூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் கர்நாடகா விவசாயிடம் பணம் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    தமிழக தேர்தல்.. பாயும் கர்நாடக பணம்.. ரூட் போடும் அரசியல் புள்ளிகள்.. சிக்கிய ஆனேக்கல் ஆனந்த் - வீடியோ

    தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பூனப்பள்ளி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.

    ஓசூர் - சீர்காழி.. இரண்டு கொள்ளையிலும் உள்ள ஒற்றுமை.. கொள்ளையர்களை சிக்க வைத்த ஜிபிஎஸ் கருவி ஓசூர் - சீர்காழி.. இரண்டு கொள்ளையிலும் உள்ள ஒற்றுமை.. கொள்ளையர்களை சிக்க வைத்த ஜிபிஎஸ் கருவி

     கர்நாடக பணம்

    கர்நாடக பணம்

    அப்போது கர்நாடக மாநிலம் ஆனேக்கல் அடுத்துள்ள சிக்க ஹாகடே கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆனந்த் என்பவர் 1 லட்சத்து 18 ஆயிரத்து 600 ரூபாய் ஓசூருக்கு எடுத்து வந்துள்ளார். அதனை அவரிடம் இருந்து பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். உரிய ஆவணங்களைக் கொடுத்தபின் பணம் தருவதாக அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு பணம் கொண்டு வரப்பட்டு தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது.

     மீன் குஞ்சு வியாபாரி

    மீன் குஞ்சு வியாபாரி

    இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் சுங்கசாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் இன்று காலை ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது எவ்வித ஆவணங்களும் இன்றி எடுத்து வரப்பட்ட 4 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் பணத்தை ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் இவர் மீன் குஞ்சு வியாபாரி எனவும் இவர் காஞ்சிபுரம் பகுதியில் கிராம ஏரியில் ஏலம் எடுக்க சென்று மீண்டும் வீடு திரும்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

     மதுரை நிலவரம்

    மதுரை நிலவரம்

    மதுரையில், பணப்பட்டுவாடா, பரிசுபொருட்கள் வழங்குவதை தடுக்கும் நோக்கில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது, தேர்தல் விதிமீறல்கள் குறித்து தற்போது சில புகார்கள் எழுந்துள்ளது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் த.அன்பழகன் தெரிவித்துள்ளலார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்ட நிலையில் அறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் த.அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார். தேர்தல் விதிமீறல்கள் புகார்கள் குறித்தும் அதன் மீதான நடவடிக்கைகள் குறித்தும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து கட்பாட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    பறக்கும் படை தொலைபேசி எண்

    பறக்கும் படை தொலைபேசி எண்

    இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் த.அன்பழகன் பேசியபோது : தேர்தல் அறிவிப்பிற்கு பின் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள எண் (election flying squad contact number): 0452-2531006 - 0452 - 2531008 என்ற தரைவழி தொலைபேசி மூலமாகவும்,
    0452 - 1950 என்ற இலவச எண் மூலமாகவும் புகார்களை அளிக்கலாம்.

    லோக்கல் சேனல் விளம்பரம்

    லோக்கல் சேனல் விளம்பரம்

    கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களின் தன்மை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும், பணப்பட்டுவாடா, பரிசுபொருட்கள் வழங்குவதை தடுக்கும் நோக்கில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அன்பழகன்: தேர்தல் விதிமீறல்கள் குறித்து தற்போது சில புகார்கள் எழுந்துள்ளது , திரையரங்குகளில், லோக்கல் சேனல்களில் அரசு விளம்பரம் ஒளிப்பரப்பு செய்வதில் தேர்தல் நடத்தை விதிமீறல் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொது இடங்களில் அரசியல் தலைவர் உருவம், சின்னங்கள் இருந்தால் உடனடியாக நீக்கம் செய்யப்படும், அரசியல் கட்சிகள் தேர்தல் விதிகளுக்கு உட்பட்ட விளம்பரத்திற்கான அனுமதி வழங்கப்படும் என்றார்

    English summary
    Anand, a farmer from Chikka Hagade village near Anekal in Karnataka, had brought Rs.1 lakh to Hosur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X