ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இயற்கை உபாதையை கழிக்க சென்றவரை தாக்கி கொன்ற ஒற்றை காட்டு யானை.. பீதியில் உறைந்த மக்கள்!

Google Oneindia Tamil News

ஓசூர்: ஓசூர் அடுத்த அய்யூர் அருகே யானை தாக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அவ்வப்போது யானைகள் பிரிந்து கிராம பகுதிக்கு வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

Elephant killed a man near Hosur

இந்நிலையில் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அய்யூர் அருகே நேற்று மாலை இயற்கை உபாதைகழிக்க சென்ற இருவரை காட்டு யானை தக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒற்றை காட்டுயானை தாக்கியதில் அப்பையா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Elephant killed a man near Hosur

மற்றொருவரான நாகராஜ் பலத்த காயம் ஏற்பட்டு தப்பி வந்து உறவினரிடம் தெரிவிக்க அவரை உனிசெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து பின் தேன் கணிக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அம்மாடியோவ்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது அம்மாடியோவ்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது

சம்பவம் அறிந்த ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி அய்யூர் அருகே உள்ள இயற்கை சூழல் வன சுற்றுலா மையத்தை முற்றுகையிட்டு வனத்துறைக்கு சொந்தமான வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
பின்பு ஜன்னல் கதவுகள் என அனைத்தையும் சூறையாடினர். இதைக் கண்டு திகைத்த வனத்துறையினர் போலிசாருக்கு தகவல் அளித்தனர்.

யானைகள் தாக்கி உயிரிழப்புக்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக தெரிவித்து அப்பையா அவர்களின் உறவினர்கள் வனப்பகுதியில் இருந்த உடலை எடுக்கவிடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலிசார் குவிக்கப்பட்டு தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா, சார் ஆட்சியர் குமரேசன் உறவினர்களை சமாதனம் செய்து சிகிச்சை பெற்றுவந்த நாகராஜை மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அப்பையா உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.வனப்பகுதிக்கு சென்ற இருவரை யானை தாக்கி, ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

English summary
Elephant killed a man near Hosur. One injured severly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X