• search
ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கோவிலுக்கு போலாம் வாம்மா.. இப்படி கூப்பிட்ட அப்பா என்ன செய்தார் தெரியுமா.. அதிர வைக்கும் சுவாதி கொலை

|
  ஓசூரில் கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதி ஆணவக்கொலை.. கௌசல்யா எதிர்ப்பு

  ஓசூர்: சுவாதியை சரமாரியாக அடித்து உதைத்தது மட்டுமின்றி, அவரது கை, கால்களையும் கட்டி ஆற்றில் உயிரோடு தூக்கி போட்டதும் பெற்ற தகப்பனேதானாம்!

  ஓசூர் அருகே ஒரு கிராமத்தில் சுவாதி, நந்தீஷ் என்பரை காதலிக்க, இந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்தது. வேறு வேறு சாதி என்பதால் வழக்கம்போல் எதிர்ப்பு வந்ததால், இருவரும் வீட்டை விட்டுஓடிப்போய் ஒரு கோயிலில் வைத்து தாலி கட்டி கல்யாணம் செய்து கொண்டார்கள். பிறகு அந்த திருமணத்தை முறைப்படி பதிவும் செய்து கொண்டார்கள்.

  எங்கேயே நிம்மதியாக விறகு கடை ஒன்றை வைத்து பிழைத்துகொண்டிருந்தவர்களை, சுவாதியின் பெற்றோர் கண்டு பிடித்து விட்டார்கள். சுவாதியின் அப்பா சீனிவாசன், தனது சொந்தக்காரர்கள் கிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோரை கூட்டிக் கொண்டு, வாடகைக்கு ஒரு காரையும் எடுத்துக் கொண்டு சுவாதியை விரட்டி பிடித்து விட்டார்கள்.

  காரில் ஏற சொன்னார்

  காரில் ஏற சொன்னார்

  நேரில் பார்த்ததும், சுவாதி-நந்தீஷிடம் நல்ல மாதிரியாக பேசி, நடித்து காரில் ஏற்றிக் கொண்டு மாண்டியா பக்கம் சென்று விட்டார்கள். அங்கு வைத்து அவர்களிடம், பிரிந்து போய்விடுமாறு சொல்ல, இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத காதல் ஜோடி மறுப்பு சொன்னார்கள். அதன்பிறகுதான் 3 பேரும் வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

  அடிவயிறு நாசம்

  அடிவயிறு நாசம்

  இருவரையும் தாக்கி கொன்றதுடன், சுவாதியின் முகத்தை சிதைத்து, அடிவயிற்றை நாசமாக்கி, பிறகு ஒரு மூட்டையில் கட்டி ஆற்றில் வீசி விட்டுபோனார்கள். இதையடுத்துதான் அழுகிய நிலையில் பிண மூட்டையை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட 3பேரையும் கைது செய்துவிட்டார்கள்.

  கிராமத்தினர் தலைமறைவு?

  கிராமத்தினர் தலைமறைவு?

  ஆனால் இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களும் இன்னும் இருக்கிறார்கள். அதனால் விசாரிப்பதற்காக சுவாதி கிராமத்துக்கு போலீசார் சென்றால், ஊரே காலியாக கிடக்கிறதாம். ஊருக்குள் ஒருவரையும் காணோம். போலீசுக்கு பயந்து கொண்டு எங்கே போயிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

  சுவாதி தயக்கம்

  சுவாதி தயக்கம்

  அதனால் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட கிராம நபர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். இதுபோக கைது செய்யப்பட்ட 3 பேரிடம் விசாரணை மிக தீவிரமாக போய்க் கொண்டிருக்கிறது. அப்போது வெளிவந்த கூடுதல் தகவல் என்னவென்றால், சுவாதியை கண்டுபிடித்தவுடன் அப்பாவை கண்டு அவர் பேச தயங்கி இருக்கிறார்.

  கோயிலுக்கு போகலாம்

  கோயிலுக்கு போகலாம்

  ஆனால் அப்பா சீனிவாசன்தான், "கோயிலுக்கு போகலாம்.. வாம்மா" என்று கூப்பிட்டிருக்கிறார். காரில் ஏறியவுடனேயே 2 பேரும் பிரிந்து விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு மாட்டேன் என்று சுவாதி சொல்லவும் ஓடும் காரிலேயே சுவாதியை அடித்து உதைத்திருக்கிறார்.

  உயிரோடு வீசினார்

  உயிரோடு வீசினார்

  இப்படி இருவரையும் கூப்பிட்டு கொலை செய்வது என்பது ஏற்கனவே 3 பேரும் பிளான் பண்ணியிருக்கிறார்கள். அதற்காக பெலக்வாடி என்ற பகுதியையும் முன்கூட்டியே தேர்வு செய்தும் இருக்கிறார்கள். அந்த இடம் வந்ததும், நந்தீஷையும், சுவாதியையும் காரில் இருந்து இறக்கி, அவர்களது கை, கால்களை கட்டி காவிரி ஆற்றில் தூக்கி உயிரோடு தூக்கி போட்டது சீனிவாசன்தானாம்!

  மேலும் 3 பேர் கைது

  மேலும் 3 பேர் கைது

  இந்த கொலை தொடர்பாக அஸ்வதப்பா, வெங்கட்ராஜ் மற்றும் லட்சுமணன் என்னும் மேலும் 3 பேர் கைது ஆகியிருக்கிறார்கள். இதுவரை இந்த கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எஸ்கேப் ஆன கார் டிரைவர் இன்னும் பிடிபடவே இல்லை. அவர் பெயர் சுவாமிநாதன். அவருக்கு போலீஸ் வலை விரிக்கப்பட்டுள்ளது.

   
   
   
  English summary
  Father killed his daughter Swathi and Nandhish in Honour Murder
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X