ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி வீட்டில் கறுப்புப்பணம் இருக்கு.. புகாரளித்தால் ரெய்டு நடத்துவார்களா?… மு.க. ஸ்டாலின் கேள்வி

Google Oneindia Tamil News

ஓசூர்: மோடி அரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் வருமானவரி சோதனை நடக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் மற்றும் ஓசூர் சட்டமன்றத் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சத்யாவை ஆதரித்தும் ஓசூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: மோடி அரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் வருமானவரி சோதனை நடக்கிறது என்றும், புகாரளித்ததால் சோதனை செய்கிறார்கள் என தமிழக தேர்தல் அதிகாரி கூறுவதாக குறிப்பிட்ட அவர், மோடி வீட்டில் கறுப்புப்பணம் உள்ளது என நான் புகாரளித்தால் சோதனை நடத்துவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

இதுவரை பறிமுதல் செய்யப்பட்டது ரூ.1,354 கோடிப்பு... தலைமை தேர்தல் ஆணையம் தகவல் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டது ரூ.1,354 கோடிப்பு... தலைமை தேர்தல் ஆணையம் தகவல்

பயந்த கட்சி தி.மு.க. அல்ல

பயந்த கட்சி தி.மு.க. அல்ல

தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் ரெய்டுகளுக்கெல்லாம் பயந்த கட்சி தி.மு.க. அல்ல என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். ரயில்வே, வருவமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசு பணியிடங்களில் தமிழக மாணவர்கள் தொடர்ந்து புறக்கணிப்பு செய்யப்படுகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் ரெய்டுகளுக்கெல்லாம் பயந்த கட்சி தி.மு.க. அல்ல என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். ரயில்வே, வருவமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசு பணியிடங்களில் தமிழக மாணவர்கள் தொடர்ந்து புறக்கணிப்பு செய்யப்படுகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

சந்தர்ப்பவாத கூட்டணி

சந்தர்ப்பவாத கூட்டணி

தமிழகத்தில் நடைபெறும் ஊழல் குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளித்த பா.ம.க.வுடன், அ.தி.மு.க. அரசு சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளது என்று விமர்சனம் செய்த மு.க ஸ்டாலின், ஜெயலலிதாவுக்கு பிடிக்காதவர்களை தான் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அதிகம் பிடிக்கும் என்றார்.

ஜெயலலிதாவுக்கு பிடிக்காது

ஜெயலலிதாவுக்கு பிடிக்காது

மோடியை ஜெயலலிதாவுக்கு பிடிக்காது; ஆனால் இன்று அவருடன் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் கூட்டு வைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார். கே.பி.முனுசாமியை அ.தி.மு.க.வினர் ஆறு பெர்சண்ட் முனுசாமி என்று தான் அழைப்பார்கள்; ஜெயலலிதாவால் அமைச்சரவையில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் கே.பி.முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை மீண்டும் சேர்த்துக்கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

என்ன செய்தார்கள்?

என்ன செய்தார்கள்?

தங்கள் ஆட்சியில் என்ன செய்தார்கள் என்பதை சொல்லி பாஜக, அதிமுகவால் வாக்கு கேட்க முடியவில்லை என்றும், சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டால் நான் விமர்சிக்காமல் இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

கிடப்பில் போட்டது அதிமுக

கிடப்பில் போட்டது அதிமுக

திமுகவுக்கு பெயர் வந்துவிடும் என்பதால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டது அதிமுக என்ற மு. க ஸ்டாலின், ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றியது தாம் தான் என கூறினார்.

English summary
Black money at Modi's home: Will Do Raid ? Stalin question
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X