ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒசூர் அம்மா உணவகங்களில், உணவுக்கான முழு செலவை ஏற்றது அதிமுக.. முதல்கட்டமாக ரூ.5 லட்சம் நிதி

Google Oneindia Tamil News

ஒசூர்: ஒசூர் மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கிட முழுப்பொறுப்பையும் ஏற்றுள்ளது அதிமுக. முதல் தவணையாக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஆணையரிடம் வழங்கினார்.

Recommended Video

    ஒசூர் அம்மா உணவகங்களில், உணவுக்கான முழு செலவை ஏற்றது அதிமுக.. முதல்கட்டமாக ரூ.5 லட்சம் நிதி - வீடியோ

    தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் மே 3ம் தேதி ஊரடங்கு முடியும் வரை, ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில், மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு செய்துள்ளார்.

    Hosur Amma unavagams will give free foods from AIADMK fund

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரில் உள்ள இரண்டு அம்மா உணவகங்களில், ஏழை எளியோருக்கு மூன்று வேளை உணவு வழங்க முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஒசூர் மாநகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியனிடம், முதல் தவணையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்.

    இரண்டாவது கட்டமாக, 10 டன் காய்கறிகளை அம்மா உணவகத்திற்கு வழங்கிய பாலகிருஷ்ணா ரெட்டி, ஊரடங்கு முடியும் வரை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அம்மா உணவகங்களில் உணவு வழங்க ஏற்படும் முழு செலவை ஏற்றுக்கொள்வதாகவும் அறிவிப்பு செய்துள்ளார்.

    Hosur Amma unavagams will give free foods from AIADMK fund

    இந்த நிகழ்ச்சியின் மாவட்ட கழக பிரதிநி சிட்டி ஜெகதீஷ், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் ராமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் தமிழக அரசு நடத்திவரும் அம்மா உணவகங்கள் அனைத்திலும் அதிமுக சார்பில் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அட்சய திருதியை 2020: உப்பு மஞ்சள் வாங்குங்க உணவு தானம் கொடுங்க புண்ணியம் பெருகும்அட்சய திருதியை 2020: உப்பு மஞ்சள் வாங்குங்க உணவு தானம் கொடுங்க புண்ணியம் பெருகும்

    முதல்வரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்திருக்கிறார்.

    Hosur Amma unavagams will give free foods from AIADMK fund

    இந்த நிலையில், ஒசூரிலும் விலையில்லா உணவுக்கு நிதி வழங்க அதிமுக முன்வந்துள்ளது. ஆனால், அரசின் அம்மா உணவகங்களில், அதிமுக செலவிட்டு உணவு வழங்குவது தவறான முன்னுதாரணம் என்று, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    English summary
    AIADMK has agreed to provide free food to AMMA unavagams in the Hosur Corporation. In the first installment, former minister Balakrishna Reddy presented a checque for Rs.5 Lakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X