ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன, இவ்ளோ ஈஸியா பைக்கை திருடிட்டாங்க.. ரொம்ப உஷாரா இருக்கணும் போல.. சிசிடிவி வீடியோ

Google Oneindia Tamil News

ஒசூர்: இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்று பொருள் வாங்கி விட்டு திரும்புவதற்குள் அந்த வாகனத்தையே அபேஸ் செய்து விட்டான் ஒரு மலை விழுங்கி திருடன்.

Recommended Video

    கிருஷ்ணகிரி: டூவீலரை அசால்ட்டாக ஆட்டைய போட்ட இளைஞர்.. போலீசார் வலைவீச்சு..!

    ஓசூர் மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு இடைப்பட்ட கர்நாடக எல்லைப் பகுதியான அத்திபள்ளி என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஓசூர் ரிங் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரசன்னகுமார். இவர் கர்நாடக எல்லைக்குள் வந்து அங்குள்ள கடையில் குறைந்த விலையில் பொருட்களை வாங்குவது வழக்கம்.

    Hosur mans bike stolen in Karnataka, CCTV video reveals the details

    அதேபோல, சம்பவத்தன்று அத்திப்பள்ளி பகுதியில் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர் முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பொருளை வாங்க கடைக்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்தால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக்கை காணோம்.

    பதறியடித்து, அத்திப்பள்ளி போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரை பதிவு செய்துள்ள போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்தனர். அப்போது ஒரு வாலிபர் அசால்டாக அந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.

    இவ்வளவு எளிதாக இருசக்கர வாகனத்தை ஒருவர் திருடிச் செல்ல வேண்டுமென்றால், நீண்ட காலமாக இதுபோன்ற திருட்டு வேலையில் ஈடுபடும் திருடனாகத்தான் இருக்க வேண்டும் என காவல்துறை சந்தேகிக்கிறது.

    நீங்களும் இந்த வீடியோவை பாருங்கள். அப்போதுதான் நமது வாகனங்களை எந்த அளவுக்கு பாதுகாப்புடன் நிறுத்த வேண்டும் என்ற அவசியத்தை உணர முடியும்.

    English summary
    Hosur man lost his motorcycle in Attibele, Karnataka area, while he was busy with his shopping, CCTV footage revealed a man stolen, the bike very easily.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X