ஓசூர் மக்களுக்கு சூப்பர் செய்தி.. வருகிறது பெங்களூர் - ஓசூர் மெட்ரோ ரயில்.. விரைவில் தொடங்கும் பணிகள்!
ஓசூர்: ஓசூரில் மெட்ரோ ரயில் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணி தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள், மாவட்டங்கள் பல உள்ளன. உதாரணமாக கோவை, திருச்சி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகியவை தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்கள் ஆகும். அதிலும் ஓசூர் நகரம் பெங்களூருக்கு இணையாக வேகமாக வளர்ந்து வருகிறது.

பெங்களூருக்கு செல்ல வேண்டிய பல்வேறு முதலீடுகள் ஓசூரை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதனால் ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டங்களும் உள்ளன. பெங்களூரில் இருந்து குறிப்பிட்ட சுற்றுவட்டார வரை விமான நிலையம் அமைக்க கூடாது என்ற விதி உள்ளதால் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் சிக்கல் உள்ளது.
இப்படிபட்ட நிலையில்தான் ஓசூரில் மெட்ரோ கொண்டு வரப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணி தொடக்கி உள்ளது.
மெட்ரோ ரயில் அமையும் 20.5 கி.மீ தூரத்தில் 11.7 கி.மீ கர்நாடகாவிலும், 8.8 கி.மீ தமிழ்நாட்டிலும் உள்ளது. தற்போது எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் மெட்ரோ அமைக்கப்பட்டு வருகிறது. இங்கே பணிகள் முடிந்த பின் ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடக்கும் என்று கூறப்படுகின்றன.
எப்படி கட்டப்படும்?: இதில் ஓசூர் உள்ளே வரும் மெட்ரோ பணிகளை தமிழ்நாடு அரசு கவனிக்கும். தமிழ்நாடு அரசு செலவில் இந்த பணிகள் செய்யப்படும். பெங்களூர் எல்லை உள்ளே வரும் பணிகள் கர்நாடக அரசால் செய்யப்படும். இது இந்தியாவில் இரண்டு மாநிலங்களுக்கு இடையில் கட்டப்படும் இரண்டாவது மெட்ரோ ஆகும்.
ஏற்கனவே டெல்லி ஹரியானா இடையே - டெல்லி - குர்கான் மெட்ரோ உள்ளது. இரண்டும் இதேபோல் இணைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தமிழ்நாடு - கர்நாடகா இடையே மெட்ரோ சேவை வர உள்ளது. தமிழ்நாட்டில் வேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாக ஓசூர் உள்ளது.

கடந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு, சென்னையில் பெருநகர் வளர்ச்சி குழுமம் (Chennai Metropolitan Development Authority) உள்ளது போல இனி கோவை, மதுரை, திருப்பூர், ஓசூர் பகுதியில் புதிய பெருநகர் வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்தப்படும். இந்த நகரங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும். உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெறிப்பிவித்தது.
இதையடுத்து கோவை, மதுரை பகுதிகளில் மெட்ரோ கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. நிலம் கண்டுபிடிக்கும் பணிகள் முடிந்துவிட்டன. இனி கொஞ்சம் கொஞ்சமாக சர்வே முடிந்து கட்டுமான பணிகள் தொடங்கும். 2027 - 2028ல் இரண்டு நகரங்களிலும் முதல் மெட்ரோ சேவை தொடங்கும்.
இதே காலகட்டத்தில் ஓசூரில் மெட்ரோ சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை, கோவையை விட இங்கே எளிதாக மெட்ரோ அமைக்க முடியும் என்பதால் விரைவில் பணிகள் தொடங்கும். பெங்களூரில் இருந்து வெளியேறும் முதலீடுகள் ஓசூரில் குவிந்து வருவதால் வேகமாக ஓசூர் வளர்ந்து வருகிறது. மெட்ரோ வரும் பட்சத்தில் ஓசூர் இன்னும் வேகமாக வளர வாய்ப்புகள் உள்ளன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications