ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ் பரவியது எப்படி.. சீனாவில் இருந்து தாயகம் திரும்பிய ஓசூர் மாணவர் பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய இளைஞருக்கு கொரோனா அறிகுறிகள் ?

    ஓசூர்: சீன மக்களின் உணவு முறைகளால் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது என அந்நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

    சீனாவில் வுகான் மாகாணத்தில் உள்ள மீன் சந்தையிலிருந்து கொரோனா என்ற ஒரு வகை வைரஸ் பரவி வருகிறது. இது முதல்முதலாக கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 258 -க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். சீனாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் படிக்கும் இந்திய மாணவர்கள் 400 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.

    சீனாவிலிருந்து திருவண்ணாமலை வந்த சாப்ட்வேர் என்ஜீனியருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி சீனாவிலிருந்து திருவண்ணாமலை வந்த சாப்ட்வேர் என்ஜீனியருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

    மருத்துவமனை

    மருத்துவமனை

    இந்த மாணவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சந்திரசேகரன் (21) என்ற மாணவரும் ஒருவர். இவர் தளி சாலையில் வசித்து வரும் முருகவேலின் மகன் ஆவார். இவர் 25-ஆம் தேதி சீனாவில் இருந்து புறப்பட்டு மறுநாள் ஓசூர் வந்தடைந்தார். பின்னர் மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று ஓசூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார்.

    நோய்

    நோய்

    அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது குறித்து சந்திரசேகரன் கூறினார். அவர் கூறுகையில் சீனாவில் வவ்வால்களிடம் இருந்து பாம்புகளுக்கும் அதை சாப்பிடும் சீன மக்களும் பரவியது. சுருக்கமாக சொல்ல போனால் சீன மக்களின் உணவு பழக்க வழக்கத்தால் மட்டுமே இந்த நோய் பரவி வருகிறது.

    அறிவுறுத்தல்

    அறிவுறுத்தல்

    எங்கள் கல்லூரி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தேன். ஓசூர் பகுதியில் தங்கி இருக்க வேண்டும். வரும் 21-ஆம் தேதி சீனாவிற்கு திரும்பி கல்லூரிக்கு வருமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது என்றார் சந்திரசேகரன். மொத்தம் 11 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் மூலம் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை

    சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகில் 17நாடுகளில் பரவிவிட்டது. தமிழகத்திலும் அந்த நோய் பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சீனா, ஹாங்காங்கில் இருந்து வந்த திருவண்ணாமலை இளைஞருக்கும், சென்னை பெண்ணுக்கு அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களது ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    English summary
    A student who reached his motherland Hosur says Corona virus spreads because of Chinese food habits.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X