ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மஞ்ச கொடியை கட்டிகிட்டு, ஆரவாரமாக வந்த கன்னட அமைப்பினர்.. தடுத்து நிறுத்திய தமிழக போலீஸ்.. பரபரப்பு

Google Oneindia Tamil News

ஒசூர்: தமிழகத்தில் கடந்த மாதம் கர்நாடக மாநில கொடியினை வாகனத்தில் கட்டிக் கொண்டு வந்தவர்களை தமிழகத்திற்குள் யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறி, கன்னட அமைப்பினர், சுமார் 200க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் தமிழகத்தில் நுழையும் போராட்டம் நடத்தினர்.

கன்னடர்கள் தங்களுக்கென்று ஒரு கொடியை வைத்துள்ளனர். மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணத்தில் அந்த கொடி காணப்படும். கர்நாடக உதய தினம் உள்ளிட்ட எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், இந்த கொடிதான் பறக்கவிடப்படும்.

Kannada organization people try to enter in Hosur border

இந்த நிலையில்தான், இப்படி ஒரு கொடியை கட்டிக் கொண்டு தமிழகத்தில் பயணப்பட்ட ஒரு சில கன்னடர்களை, தமிழகத்தை சேர்ந்த யாரோ தாக்கியுள்ளனர். இதை கண்டித்துதான், எல்லை தாண்டும் போராட்டம் அறிவித்தனர் கன்னட அமைப்பினர். அதிலும், பெங்களூர்-ஒசூர் ஜூஜுவாடி எல்லைக்குள், இன்று அவர்கள் நுழையப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து, அங்கு தமிழக போலீசார் குவிக்கப்பட்டனர்.

எதிர்பார்த்ததை போலவே, கன்னட அமைப்பை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் 100 இருசக்கர வாகனங்களில், கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளியில் இருந்து தமிழக எல்லையான ஓசூர் ஜூஜுவாடி வழியாக தமிழகத்தில் நுழையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொஞ்ச நாளில் திருமணம்.. ஆசையாக ஷாப்பிங் போன ரவீந்தர் சிங்.. சுட்டு கொலை.. பாகிஸ்தானில் பகீர் கொஞ்ச நாளில் திருமணம்.. ஆசையாக ஷாப்பிங் போன ரவீந்தர் சிங்.. சுட்டு கொலை.. பாகிஸ்தானில் பகீர்

அங்கு ஏற்கனவே, 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கர்நாடக மாநில கொடியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், பெண்கள் என கன்னட கொடியினை கையில் எந்தி ஓசூர் வழியாக தமிழகத்தில் நுழைய முயன்றவர்களை எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தமிழகத்திற்கு எதிராக கோஷமிட்டனர். கன்னடர்களை தாக்கிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் போராட்டம் மிக பெரிய அளவில் தொடரும் என போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

English summary
Kannada organization people try to enter in Hosur border, to oppose Tamil attackers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X