ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டேய்.. நாக பாம்புடா.. பயமா இருக்கு.. விட்றா.. மாறன் வந்துட்டார்ல.. பாம்பை பிடிச்சிடுவார்!

ஒசூர் குடியிருப்பு பகுதிகளில் விஷப்பாம்புகள் நடமாட்டம் அதிகம் என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓசூரில் சுற்றித்திரியும் பாம்புகள்...ஈஸியாக பிடிக்கும் மாறன்-வீடியோ

    ஒசூர்: "டேய்.. பாம்புடா.. பயமா இருக்கு" என்றும், "விடுடா.. மாறன் வந்துட்டார்.. பாம்பை பிடிச்சிடுவார்" என்று சிறுவர்களின் குரல் பயமும், தெம்பும் கலந்து வெளிப்பட்டது!

    ஒசூர் நகரின் பல்வேறு இடங்களில் புதுசு புதுசாக குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. இதனால் இங்கு பாம்புகள் அதிக அளவில் இங்கு வளைந்து நெளிந்து போய் கொண்டிருக்கிறது.

    Land Serpent entered the Residential area in Hosur Surrounding

    குறிப்பாக ஒசூர் விகாஷ்நகர், சிப்காட் குடியிருப்பு பகுதி, மத்திகிரி உள்ளிட்ட 4 இடங்களில் நிறைய வீடுகள் உள்ளன. இந்த இடங்களில் நாக பாம்புகள், கண்ணாடி விரியன் போன்ற விஷமுள்ள பாம்புகள் புகுந்து விட்டன. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். சிறுவர்கள் பாம்பை கண்டதும் வீட்டிற்குள்ளேயே பயந்து உட்கார்ந்துவிட்டனர்.

    மூக்கை துளைத்த உணவின் வாசம்... ஊருக்குள் விருந்துக்கு வந்த அனகோண்டா... வைரல் வீடியோமூக்கை துளைத்த உணவின் வாசம்... ஊருக்குள் விருந்துக்கு வந்த அனகோண்டா... வைரல் வீடியோ

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பாம்புபிடி வீரர் மாறனுக்கு தகவல் அளித்தனர். மாறன் அங்கு வந்ததுமே எல்லோருக்கும் ஒரு நிம்மதி ஏற்பட்டது. கையில் ஒரு பெரிய சாக்கு பையுடன் மாறன் வந்தார்.

    ஊர்ந்து சென்று கொண்டிருந்த 4 பாம்புகளையும் லாவகமாக பிடித்து சாக்கு பைகளில் அடைத்துவிட்டார். மேலும் விஷமுள்ள குட்டி குட்டி பாம்புகளை ஒரு லிட்டர் காலி வாட்டர் பாட்டிலில் போட்டு மூடிவிட்டார்.

    அந்த பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் பாம்புகள் நெளிந்து.. உருண்டு.. பாட்டிலுடன் மண்ணில் புரண்டது. பிடிபட்ட பாம்புகளை ஒசூர் அருகேயுள்ள பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு போய் விட்டுவிட்டார் மாறன். அப்போதுதான் அந்த பகுதி மக்களுக்கு உசுரே வந்தது!

    English summary
    Four Poisonous Snake like caught in the Residential area in Hosur Surroundings
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X