ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒசூர் அருகே துணிகரம்.. லாரியை வழிமறித்த கொள்ளையர்கள்.. பல கோடி மதிப்புள்ள ரெட்மி போன்கள் கொள்ளை

Google Oneindia Tamil News

ஒசூர்: தேசிய நெடுஞ்சாலையில் செல்போன் ஏற்றிவந்த லாரி டிரைவர்களை தாக்கி பலகோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Recommended Video

    ஒசூர் அருகே துணிகரம்.. தேசிய நெடுஞ்சாலையில் பல கோடி மதிப்புள்ள MI போன்கள் செல்போன்கள் கொள்ளை - வீடியோ

    சென்னை பூந்தமல்லியிலிருந்து பல கோடி மதிப்பிலான ரெட்மி செல்போன்களை ஏற்றிக்கொண்டு மும்பை நோக்கி வந்துக்கொண்டிருந்தது ஒரு, கண்டெய்னர் லாரி.

    MI mobile phones stolen from trucks near Hosur

    லாரியில் அருண்(26), சதீஷ் குமார்(29) என்ற இரு டிரைவர்கள் இருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள மேலுமலை என்னுமிடத்தில் வந்தபோது லாரி டிரைவர்கள் இருவரையும் தாக்கியுள்ளது கொள்ளை கும்பல். பிறகு, லாரியில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்களை திருடி சென்றுள்ளனர்.

    MI mobile phones stolen from trucks near Hosur

    காயமடைந்த டிரைவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த காவல்துறை விசாரணையை துவக்கியுள்ளது. கொள்ளை கும்பலை பிடிக்க, ஒசூர் டிஎஸ்பி முரளி தலைமையிலான 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கி உள்ளனர்.

    English summary
    A container lorry carrying multi-crore worth MI mobile phones from Poonamallee, Chennai to Mumbai when the robbers attacked two lorry drivers Arun (26) and Satish Kumar (29) when they reached Hosur next to Melumalai in Krishnagiri district and stole mobile phones worth crores of rupees from the lorry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X