ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெருமாளுக்கே இவ்வளவு சோதனையா.. பெங்களூர் போக முடியாமல் இன்னும் தவிக்கும் கோதண்டராமர் சிலை!

பெருமாள் சிலையை கொண்டு செல்வதில் திரும்பவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ஓசூர்: பெருமாளுக்கே இவ்வளவு சிக்கலா? இன்னும் பெங்களூருக்கு கொண்டு போக முடியாமல் கோதண்டராமர் சிலைக்கு சிக்கல் நீண்டு கொண்டே வருகிறது!

150 டன் எடை கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலையை ராட்சச லாரியில் போன மாசம் ஏற்றினார்கள். பெங்களூரில் உள்ள ஒரு கோயிலுக்கு கொண்டு செல்லவே இப்படி ஏற்பாடு ஆனது.

Problem of transorting Kothandaramar Statue near Hosur

ஆனால், எத்தனையோ இடைஞ்சல்கள், தடங்கல்கள் என்று தினம் ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது. டயர் பஞ்சர், சாலை குறுகல், வீடு, கடைகள் இடிப்பு என நித்தம் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.

விதிமுறைகளை மீறுகிறார் மோடி.. தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை... நாராயணசாமி ஆவேசம் விதிமுறைகளை மீறுகிறார் மோடி.. தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை... நாராயணசாமி ஆவேசம்

கடைசியாக சாமல்பள்ளம் எனும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறை மறுத்ததால் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மீண்டும் சிலை பயணம் தொடங்கியதும் பக்தர்கள் உற்சாகமானார்கள்.

ஆனால், ஓசூர் அருகே சின்னார் என்ற இடத்தில் திரும்பவும் லாரி நின்றுவிட்டது. பாதை சரியில்லை என்று சொல்லப்படுகிறது. லாரி சக்கரம் மண்ணில் மாட்டிக் கொண்டுவிட்டதால், லாரியை கொஞ்சம்கூட இப்படி, அப்படி நகர்த்தவே முடியவில்லையாம்.

இதனால் மண் சாலையை சீரமைக்கும் பணி நடந்து முடிந்துவிட்டது. ஆனால், சிலை ஏற்பாட்டாளர்களுக்கும், சிலையை கொண்டு செல்லும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கும் இடையே சண்டை வந்துவிட்டதாம். இந்த பிரச்சினை காரணமாக திரும்பவும் சிலை பெங்களூர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள்.

அதனால் திரும்பவும் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்களுக்கோ குஷியோ குஷி. பெருமாள் எங்கெல்லாம் நிறுத்தி வைக்கப்படுகிறாரோ, அங்கெல்லாம் பக்தர்கள் குவிந்து தரிசித்து வருகிறார்கள். எப்படியோ.. எல்லா இடையூறுகளையும் இதுவரை தாங்கி வந்துவிட்டார் பெருமாள்.. இன்னும் 2 நாளில் பெங்களூருக்கு புறப்பட்டு விடுவாராம்!

English summary
Problem returning Bengalore kothandaramar statue near Hosur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X