ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருஷ்டி பூசணிக்கே இந்த சோதனையா.. என்ன கடவுளே இது!

ஓசூர் பகுதிகளில் திருஷ்டி பூசணிக்காய் ஏற்றுமதி மந்த நிலை ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓசூர் பகுதிகளில் திருஷ்டி பூசணிக்காய் ஏற்றுமதி மந்தம்-வீடியோ

    ஓசூர்: பொருளாதார மந்தநிலையால் சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதால் ஒரு நூதனமான சிக்கல் வந்துள்ளது.

    அதாவது தொழிற்சாலைகளில் பூஜைகளின்போது உடைக்கப்படும் திருஷ்டி பூசணி விலையில்லாமல் தோட்டத்தில் வீணாகி வரும் சோகத்தை ஓசூர் விவசாயிகள் சந்தித்துள்ளனராம்.

    பூஜைகளின்போது முக்கியமான ஒரு விஷயம் திருஷ்டி பூசணி. குறிப்பாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகளை குறிவைத்து ஆண்டுதோறும் திருஷ்டி பூசணி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    ஓசூர் திருஷ்டிப் பூசணி

    ஓசூர் திருஷ்டிப் பூசணி

    ஓசூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குறு - சிறு தொழிற்சாலைகள் அமைந்திருப்பதால் தசரா பண்டிகையை விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இதனால் இங்கு ஆண்டுதோறும் திருஷ்டிப் பூசணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும். வியாபாரமும் சிறப்பாகவே இருக்கும்.

    சோகத்தில் விவசாயிகள்

    சோகத்தில் விவசாயிகள்

    ஆனால் தற்போது சிறு குறு தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு வருவதாலும், கட்டாய விடுமுறைக்கு அவை தள்ளப்பட்டு வருவதாலும், ஓசூரில் மட்டுமே 10 ஹெக்டேர் நிலப்பரப்பில் திருஷ்டி பூசணி விவசாயம் செய்த விவசாயிகள் விற்பனையின்றி தவித்தனர்.

    கோவையிலும் சிக்கல்

    கோவையிலும் சிக்கல்

    தமிழகத்தின் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், தொழிற்சாலைகள் மூடலால் பூசணி ஏற்றுமதி தடைப்பட்டதாக கவலை தெரிவிக்கும் விவசாயிகள் விரைவில் தொழிற்சாலைகள் சுமூக நிலைக்கு திரும்பினால்தான் தங்களது நிலை மேம்படும் என்று சொல்கிறார்கள்.

    திறந்தால்தான் உண்டு

    திறந்தால்தான் உண்டு

    தசரா பண்டிகைக்கு முன்பாக பூசணி கிலோ 10வரை விற்றபோதும், பண்டிகைக்காக பூசணியை வாங்குபவர்களே இல்லாததால், விவசாயிகள் பூசணியை பறிக்காமல் தோட்டதிலேயே விட்டிருப்பதால், தோட்டத்திற்கு உரமாக திருஷ்டி பூசணி அழுகி வரும் சம்பவம் விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    எப்படியெல்லாம் சோகம் வருதுப்பா..!

    English summary
    There has been a slowdown in Thirushti pumpkin exports near hosur due to impact of Impact of Small and Small Businesses
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X