ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒசூரில் மதுபோதையில் கொள்ளையர்களிடையே வாக்குவாதம்.. ஒருவரை கொலை செய்த 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

Google Oneindia Tamil News

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த நஞ்சாபுரம் கிராமத்தில் மது அருந்தியபோது நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்தால் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார்.

ஒசூரை அடுத்த நஞ்சாபுரம் கிராமத்தில் தளி அருகே கொத்தனுா் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், முக்காண்டபள்ளி கொத்துரை சேர்ந்த சுக்ரீவன், அவரது நண்பர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர்.

கனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்கனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்

தப்பிய நண்பர்கள்

தப்பிய நண்பர்கள்

அப்போது விஜயகுமார் மற்றும் சுக்ரீவன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது சுக்ரீவன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயகுமாரை கழுத்து, மார்பு பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

மருத்துவமனை

மருத்துவமனை

இதையத்து அந்த வழியாக வந்த சிலர் விஜயகுமார் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு மத்திகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விஜயகுமாரை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமானைக்கு அனுப்பிவைத்தனர்.

வழிப்பறி

வழிப்பறி

ஆனால் விஜயகுமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியியே உயிரிழந்தார். இதையடுத்து சடலத்தை பிரேதப் பரிசோதனைகாக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் அனைவருமே கொள்ளை, வழிப்பறி, திருட்டு, ஏடிஎம் கொள்ளை போன்ற வழக்குகளில் தொடர்பு உள்ளவர்கள் என தெரியவந்தது.

விசாரணை

விசாரணை

இவர்கள் மீது ஒசூர், தளி, சிப்காட் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காவல் நிலையங்களில் பல்வேறு புகார்கள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மத்திகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Robberer who had liquor with his friends in Hosur, murdered by them. Police investigations start.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X