ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வடமாநிலங்கள் பசுவின் பேரில் நடந்த கொலைகளை பற்றி பேசாத ரஜினி இப்போது பேசுவது ஏன்?.. தமிமுன் அன்சாரி

Google Oneindia Tamil News

Recommended Video

    வடமாநிலங்கள் பசுவின் பேரில் நடந்த கொலைகளை பற்றி பேசாத ரஜினி இப்போது பேசுவது ஏன்?.. தமிமுன் அன்சாரி

    ஒசூர்: வடமாநிலங்களில் பசுமாடுகளின் பேரில் நடந்த கொலைகளை பேசாத ரஜினி தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை வன்முறை என பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஒசூரில் தமிமுன் அன்சாரி பேட்டி அளித்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் குடியுரிமை திருத்த சட்டமசோதாவை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவருமான தமிமுன் அன்சாரி அவர்கள், முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில் நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் திருத்த ஆணவத்திற்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 30 ஆண்டுகள் இல்லாத வகையில் மக்களே தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர்.

    குடியுரிமை திருத்த சட்டம்.. குவாஹாத்தியில் பெண்கள் ஒன்று திரண்டு மாஸ் போராட்டம்குடியுரிமை திருத்த சட்டம்.. குவாஹாத்தியில் பெண்கள் ஒன்று திரண்டு மாஸ் போராட்டம்

    முதல்வர்

    முதல்வர்

    சாதி மதத்தை விடுத்த இளைஞர்கள்,மாணவர்கள் ஜனநாயகத்தை காக்க களத்தில் இறங்கியிருப்பது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
    பாஜகவின் கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் உட்பட புதுச்சேரி, மேற்கு வங்காளம், கேரளா மாநில முதல்வர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என துணிச்சலாக அறிவித்ததைபோல தமிழக முதல்வரும் அறிவிக்க வேண்டும்.

    மனித நேய ஜனநாயக கட்சி

    மனித நேய ஜனநாயக கட்சி

    தமிழ்நாட்டில் சட்டத்தை அமல்படுத்த நினைத்தால் மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவோம். திமுக தலைமையில் டிசம்பர் 23 சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு அழைப்பு வந்துள்ளது.

    தமிழர்கள்

    தமிழர்கள்

    அதில் விவசாயிகள், வணிகர்கள், தமிழ் தேசிய, திராவிட கட்சிகளை சேர்ந்தோர் அரசியல் அமைப்புகளை மறந்து அனைவரும் பங்கேற்க வேண்டும். நடிகர் ரஜினியின் உபதேசம் தமிழர்களுக்கு தேவையில்லை.

    வன்முறை

    வன்முறை

    வட மாநிலங்களில் பசுமாட்டின் பேரில் நடந்த கொலைகள் வன்முறைகள் குறித்து பேசாத ரஜினி, தமிழகத்தில் உரிமைகளுக்கான போராட்டத்தை வன்முறை என பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும் பேசினார். நாடு முழுவதுமான போராட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது என தெரிவித்திருந்தார்.

    English summary
    MLA Thamimum Ansari says that Tamilnadu is not in a need of getting Rajinikanth's advice
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X