ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டக்குன்னு பார்த்தால் பாத்திரக்கடை போல தோணும்.. ஆனால் மேட்டரே வேற

ஓசூர் ஹோட்டலில் டிபன் பாக்ஸ்களில் சாப்பாடு பார்சல் செய்யப்படுகிறது.

Google Oneindia Tamil News

ஓசூர்: பளபளவென டிபன் பாக்ஸ்களை அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை டக்கென பார்த்தால் ஒரு பாத்திரக்கடை போலதான் தோன்றும். ஆனால் அது ஒரு ஹோட்டல்!!

பிளாஸ்டிக் உபயோகிக்க கூடாது என்று அரசு சொல்லி கண்டிப்புடன் சொல்லிவிட்டது. அதனால் உணவு பொருட்களை பார்சல் செய்ய வாழை, தென்னை, தாமரை இலைகளையும், மூங்கில், மண்பாண்டம் உள்ளிட்ட பொருட்களையும் பயன்படுத்த மக்கள் தொடங்கி விட்டார்கள்.

அரசு அறிவிப்பு வெளியானவுடனேயே கடைக்காரர்கள் இதற்கு இவ்வளவு ஒத்துழைப்பு தருவார்கள் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிலும் சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள்தான் பிளாஸ்டிக் ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

பொட்டலங்கள்

பொட்டலங்கள்

மற்ற கடைகளை காட்டிலும் ஹோட்டலில்தான் நிறைய பார்சல்கள் கட்ட வேண்டி வரும். ஒவ்வொரு உணவுக்கும் ஒரு பொட்டலம் என்று ரெடி ஆகும். அதனால் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதில் ஹோட்டல்களுக்குதான் கூடுதல் சிக்கல் வரும்.

வாடகைக்கு டப்பா

வாடகைக்கு டப்பா

இதற்காக ஒரு ஐடியாவை கையில் எடுத்துள்ளது ஓசூரில் உள்ள ஒரு ஹோட்டல். கல்லாவில் நிறைய டிபன் பாக்ஸ்களை அடுக்கடுக்காக வைத்திருக்கிறது. பெரிய மற்றும் சிறிய கேரியர்கள் உள்ளன. யாராவது பார்சல் கேட்டு வருபவர்களிடம், பாத்திரங்கள் எதுவும் இல்லையென்றால், இதிலிருந்து ஒரு டிபன் பாக்ஸை வாடகைக்கு தருகிறது. அதற்கு டெபாசிட்டாக கொஞ்சம் பணத்தையும் முன்பணமாக வாங்கி கொள்கிறது.

டெபாசிட் பணம்

டெபாசிட் பணம்

சாப்பாட்டுக்கு ஏற்ற வகையில் டிபன்பாக்ஸ்களின் சைஸ் மாறுகிறது. டிபன் பாக்சில் சாப்பாட்டை பார்சல் செய்து தருகிறார்கள். இதனை வாங்கி கொண்டு போன வாடிக்கையாளர்கள், பிறகு வந்து ஓட்டலில் டிபன் பாக்சை திரும்ப கொடுத்துவிட்டு, ஏற்கனவே தந்த டெபாசிட் பணத்தை வாங்கி கொண்டு போகிறார்கள்.

பெரும் வரவேற்பு

பெரும் வரவேற்பு

டிபன் பாக்ஸ் திரும்ப வரவில்லையென்றாலும் ஓட்டல்காரருக்கு எந்த நஷ்டமும் இல்லை. அப்படியே சாப்பாடுடன் சேர்த்து டிபன் பாக்சையும் சேர்த்து விற்ற மாதிரி ஆகிவிடுகிறது. அதனால் இந்த புதிய முறை வாடிக்கையாளர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

நோட்டீஸ் போர்டு

நோட்டீஸ் போர்டு

இதுவாவது பரவாயில்லை... உரிய பணத்தை பெற்று கொண்டு செய்கிறார்கள். சென்னையில் ஒரு ஹோட்டலில் வேற சிஸ்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த ஹோட்டல் எங்கிருக்கிறது என தெரியவில்லை. ஆனால் வெளியே ஒரு நோட்டீஸ் போர்டு வைத்திருக்கிறார்கள்.

சூப்பர்ல!!

சூப்பர்ல!!

அதில், "பார்சல் சாப்பாடு வாங்குவதற்கு கேரியர் எடுத்து வந்தால் 10 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்" என்று எழுதியுள்ளார்கள். சூப்பர்ல!! நம்ம ஆளுங்களுக்கு இந்த விஷயத்தில் இவ்வளவு விழிப்புணர்வு இருக்கும் என்று தெரிந்திருந்தால், என்னைக்கோ பிளாஸ்டிக்கை ஒழித்து கட்டி இருக்கலாம்!!

English summary
In Hosur Hotel using Tiffen box for food parcel due to No plasic
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X