ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹைதராபாத் மழை: வீடு இடிந்து விபத்து 2 மாத குழந்தை உட்பட 10 பேர் பலி

தெலுங்கானாவில் பெய்த கனமழையால் பெண்ட்லகுடா நகரத்தில் உள்ள முகமதியா ஹூல்ஸ் பகுதியில் வீடு இடிந்து விழுந்து 2 மாத குழந்தை உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெண்ட்லகுடா நகரத்தில் உள்ள முகமதியா ஹூல்ஸ் பகுதியில் பெய்த கனமழையால் வீடு இடிந்து விபத்துக்குள்ளானதில் 2 மாத குழந்தை உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. கப்பல், படகுகள் கரைக்கு அடித்துச் செல்லப்பட்டன. அம்மாநிலத்தில் பல மாவட்டங்களில் 11 செமீ மழை முதல் 24 செமீ மழை வரை பதிவாகியுள்ளது. கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமடைந்தன. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் ஏராளமான வீடுகள், வெள்ளத்தில் மூழ்கின.

10 Dead In Wall Collapse As Rain Batters Hyderabad

தெலுங்கானாவின் குறைந்தது 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, சாலைகள் சிதைந்து போயுள்ளன. பெண்ட்லகுடா நகரத்தில் உள்ள முகமதியா ஹூல்ஸ் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு 10 மணியளவில் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. இதனால், வீட்டின் அருகில் உள்ள வீடுகளில் தங்கியிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விபத்தில் சிக்கி 2 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

Recommended Video

    ஹைதராபாத்தில் பலத்த மழை.. கோர தாண்டவம் ஆடிய வெள்ளம் - வீடியோ

    விபத்து நடந்த பகுதியில் ஹைதராபாத் எம்பி அசாரூதின் ஓவைசி பார்வையிட்டார். மேலும், மீட்பு நடவடிக்கைகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்ட பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    English summary
    Ten people, including a 2 month old baby, have died in Hyderabad after a compound wall collapsed and fell on ten houses due to heavy rain late last night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X