ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தெலுங்கானாவில் ரூ.100 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்.. சதுரங்க வேட்டை பாணியில் ஏமாற்றிய பகீர் கும்பல்

Google Oneindia Tamil News

Recommended Video

    தெலுங்கானாவில் ரூ.100 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்..! | 100 crore fake currency seized in telangana

    ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 கள்ள நோட்டுகள் மற்றும 7 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரித்தனர்.

    கம்மம் மாவட்டத்தில் உள்ள சத்திப்பள்ளியில் ஒரு கும்பல் ரூ.80 லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வந்தது

    இதற்காக 2,000 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சிட்ட அந்தக் கும்பல், மேலும் கீழும் அசல் நோட்டுகளை வைத்து பண்டல்களைத் தயார்செய்து அவற்றை விடியோ எடுத்து, பொதுமக்களிடம் மோடிசடியில் ஈடுபட்டுள்ளது.

    பிரான்ஸ் ஒப்பந்தம் முதல் ரிலையன்ஸ் டிபன்ஸ் வரை.. ரபேல் ஒப்பந்தமும் வழக்கும் கடந்து வந்த பாதை!பிரான்ஸ் ஒப்பந்தம் முதல் ரிலையன்ஸ் டிபன்ஸ் வரை.. ரபேல் ஒப்பந்தமும் வழக்கும் கடந்து வந்த பாதை!

    சிக்கினார் ஆசாமி

    சிக்கினார் ஆசாமி

    இது தொடர்பாக கம்மம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சத்திப்பள்ளில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது மர்ம நபர் ஒருவர், ஒருவரை ஏமாற்றி கள்ள நோட்டுகளை மாற்றுவதற்கு முயற்சி செய்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    வீட்டில் சோதனை

    வீட்டில் சோதனை

    அப்போது தான் அந்த நபர் தாங்கள் மாதர் என்பவரது தலைமையில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதாக போலீசுக்கு தெரிவித்தார். அந்த ஆசாமி கொடுத்த தகவலின் பேரில் ஒரு வீட்டை போலீசார் சோதனை நடத்தினர்.

    7 கோடி கள்ள நோட்டு

    7 கோடி கள்ள நோட்டு

    அங்கு சுமார் 7 கோடி மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் கள்ள நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய கணிகள் மற்றும் உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    100 கோடி கள்ளநோட்டு

    100 கோடி கள்ளநோட்டு

    இதையடுத்து மாதர் தலைமையிலான 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கம்மம் மாவட்டம் மன்சூரு மண்டலத்தில் உள்ள மர்லபாடு கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு ரூ.100 கோடி மதிப்புள்ள பழைய 500, மற்றும் ரூ1000 கள்ள நோட்டுக்களை ஏற்கனவே அச்சிட்டு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    6பேரிடம் விசாரணை

    6பேரிடம் விசாரணை

    இதனால் அங்குசென்ற போலீசார் அந்த வீட்டில் இருந்த கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். மாதர் தலைமையிலான கும்பல் இதுவரை எவ்வளவு பேரிடம் எத்தனை கோடி ரூபாய் இது போன்று ஏமாற்றி புழக்கத்தில் விட்டுள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    English summary
    100 crore fake currency seized in telangana, 6 persons arrested in khammam, people cheated by Gang like cinema movie sathuranga vettai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X