ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10,000 ஏக்கரில் கஞ்சா தோட்டம்.. ஆந்திராவை உலுக்கிய கேங்.. டிரோன் மூலம் கண்டுபிடித்த அதிரடி படை!

ஆந்திராவில் செயல்பட்டு வரும் கஞ்சா தயாரிப்பு பகுதிகளை எல்லாம் மொத்தமாக அழிக்க அம்மாநில அரசு முடிவெடுத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட 10,000 ஏக்கர் கஞ்சா தோட்டம்- வீடியோ

    ஹைதராபாத்: ஆந்திராவில் செயல்பட்டு வரும் கஞ்சா தயாரிப்பு பகுதிகளை எல்லாம் மொத்தமாக அழிக்க அம்மாநில அரசு முடிவெடுத்து இருக்கிறது.

    தென்னிந்தியாவில் இப்போதெல்லாம் கஞ்சா புழக்கம் அதிகமாகிவிட்டது. நீங்கள் கேள்விப்பட்டதை வைத்து, கேரளாவில்தான் கஞ்சா உற்பத்தி அதிகமாக இருக்கிறது என்று நினைத்தால் அது தவறான விஷயம். இந்தியாவிலேயே ஆந்திராவில்தான் அதிக அளவில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது.

    அதுவும் விசாகப்பட்டினத்தில்தான் அதிக அளவில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது. அங்குள்ள படேறு பகுதியை இந்தியாவின் கஞ்சா தலைநகர் என்று அழைக்கிறார்கள்.

    எங்கு எல்லாம்

    எங்கு எல்லாம்

    விசாகப்பட்டினம் அருகே இருக்கும் பகுதிகளான படேறு, ஹகும்பேட்டா, மான்சிகிபட்டு, மண்டல்லோ ஆகிய பகுதிகள்தான் அதிக அளவில் கஞ்சாவை பயிரிடுகிறது. இங்கு 1000 கிராமங்களில் கஞ்சா பயிரிடப்படுகிறது. ஒரு கிராமத்தில் இருந்து மட்டும் குறைந்தது 1000 கிலோ கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது. பல்லாயிரம் கோடி வருமானம் இதன் மூலம் கிடைப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    தனிப்படை அமைத்தது

    தனிப்படை அமைத்தது

    ஆனால் எங்கு, எப்படி உற்பத்தி செய்கிறார்கள் என்று விவரம் தெரியாமல் இருந்தது. ஒரு பெரிய கேங்தான் இந்த போதை வியாபார உலகத்தை கட்டுப்படுத்துகிறது என்று போதை தடுப்பு பிரிவிற்கும் தகவல் வந்துள்ளது. இதையடுத்து கடந்த இரண்டு மாதம் முன் இதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    புதியது கண்டுபிடிக்கப்பட்டது

    புதியது கண்டுபிடிக்கப்பட்டது

    இந்த தனிப்படை தற்போது 5000 ஏக்கர் கஞ்சா தோட்டத்தை படேறு கிராமம் அருகே கண்டுபிடித்துள்ளது. இன்னும் 5000 ஏக்கர் எங்கே இருக்கிறது என்றும் தெரியும் என்று கூறியுள்ளது. குட்டி டிரோன் விமானங்கள் மூலம் இந்த கஞ்சா தோட்டங்களை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    இந்த மாதம் வளரும்

    இந்த மாதம் வளரும்

    இந்த கஞ்சா எல்லாம் செப்டம்பர் இறுதியில் இருந்து ஜனவரி வரை வளரும். இதனால் இந்த நேரத்தில் சோதனை செய்தால்தான் சரியாக இருக்கும் என்று இப்போது சோதனை செய்துள்ளனர். இங்கு இருந்துதான் உலகின் பல பகுதிகளுக்கு கஞ்சா கடத்தப்படுகிறது.

     அழிக்கிறார்கள்

    அழிக்கிறார்கள்

    அடையாளம் காணப்பட்டுள்ள கஞ்சா தோட்டங்களை அழிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். போலீசார், வனத்துறையினர் இதை விரைவில் அழிக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். இது கஞ்சா மார்க்கெட்டை மொத்தமாக காலி செய்யும் என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    10000 Acres of Cannabis Farm found in Andhra Pradesh with the help of the drone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X