ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தெலுங்கானா.. பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்-19 பேர் தற்கொலை!!

Google Oneindia Tamil News

Recommended Video

    11, 12-ஆம் வகுப்பு பேப்பர் திருத்திய தனியார் நிறுவனம்.. 3.28 லட்சம் மாணவர்கள் பெயில்- வீடியோ

    ஹைதராபாத்: தெலுங்கானாவில் இண்டர் மீடியட் (11,12) வகுப்பில் தேர்ச்சி பெறாத 19 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

    தெலுங்கானாவில் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. மொத்தம் 9 லட்சத்து 74 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

    19 students commit suicide in Telangana

    தேர்வு எழுதியவர்களில் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை என அறிவிக்கப்பட்டது. இதை தாங்கி கொள்ள முடியாத 19 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.

    இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தெலுங்கானா கல்வித்துறையை முதல்வர் சந்திரசேகராவ் சீரழித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

    இதையடுத்து தேர்ச்சி பெறாத மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தையும் எவ்வித கட்டணமும் இன்றி மறுமதிப்பீடு செய்ய முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    19 students have committed suicide in Telangana during last one week over the failure in the Intermediate examinations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X