ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீரென குறைந்த நெருக்கம்.. ஆவேசம் அடைந்த மாணவர்.. 19 வயது பெண்ணை ரோட்டிலேயே.. மிரண்டு போன ஆந்திரா

ஆந்திர மாணவியை இளைஞர் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: 19 வயது இளம்பெண்ணை நடுரோட்டிலேயே கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார் கல்லூரி மாணவர் ஒருவர்.. இந்த ஒரு கொலையானது ஆந்திர மாநில அரசையே மிரள வைத்துவிட்டது..!

குண்டூரை சேர்ந்தவர் அனுஷா... 19 வயதாகிறது.. நரசராவ்பேட்டையில் ஒரு காலேஜில் 2-ம் வருடம் படித்து வந்துள்ளார்.. அதே காலேஜில் படித்து வந்தவர் விஷ்ணு வர்த்தன்.. இவருக்கும் 19 வயசுதான் ஆகிறது..

இருவரும் 2 வருடங்களாக நட்பில் இருந்துள்ளனர்.. ஆனால், இந்த 2 மாசமாக அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை வந்துள்ளது.. அதனால், அனுஷா, விஷ்ணுவிடம் சரியாக பேசாமல் இருந்துள்ளார்.. தொடர்பில் இருந்தும் விலகி உள்ளார்.

விஷ்ணு

விஷ்ணு

இந்நிலையில் அனுஷாவை சந்தித்து பேசிவிடுவது என்று விஷ்ணு முடிவெடுத்தார்.. அதனால், சம்பவத்தன்று காலேஜ் முடிந்ததும், அனுஷாவிடம் சென்று, பைக்கில் ஏற்றி சென்று வீட்டில் விட்டுவிடுவதாக சொன்னார்.. அதை நம்பி அனுஷாவும் பைக்கில் ஏறி உட்கார்ந்தார்.. ஆனால், வழியில் செல்லும்போது, எதற்காக என்னை விட்டு பிரிந்து போகிறாய்? என்று அனுஷாவிடம் கேட்டுள்ளார் விஷ்ணு.

வாக்குவாதம்

வாக்குவாதம்


இது வாக்குவாதமாக முற்றியது.. ஆத்திரமடைந்த விஷ்ணு, அனுஷாவின் கழுத்தை நடுரோட்டிலேயே நெரித்தார்.. இதில் அனுஷா துடிதுடித்து இறந்துவிட்டார்.. இதையடுத்து, விஷ்ணு பதட்டமாகி விட்டார்.. சடலத்தை மறைக்க படாதபாடு பட்டார்... இறுதியில் அந்த பகுதியில் இருந்த ஒரு சாக்கடையில் சடலத்தை வீசினார்.. அப்போதும் அந்த சடலம் மேலேயே மிதந்தது.. இதனால், வேறு வழியின்றி, நேராக போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்துவிட்டார். இவர் சொல்லிதான் அனுஷா இறந்த விவகாரமே வெளியில் தெரிய ஆரம்பித்தது.

 கொந்தளிப்பு

கொந்தளிப்பு

இதனிடையே, அனுஷா கொலை செய்யப்பட்டதை அறிந்து காலேஜ் கொந்தளித்துவிட்டது.. கொலையாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்... அனுஷாவின் சடலத்தை தூக்கி நடுரோட்டில் வைத்து நியாயம் கேட்டனர்.. இதனால் அந்த பகுதியே பரபரப்பாகிவிட்டது.. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.. ஆனாலும் மாணவர்கள் பிடிவாதமாக மறியலை கைவிட மறுத்தனர்.. இதனால் இரவு வரை மாணவர்களை சமாதானப்படுத்தவே முடியவில்லை..

அறிவிப்பு

அறிவிப்பு

இறுதியில், அனுஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், குடியிருப்பதற்கு அரசு சார்பில் ஒரு வீடும் கொடுக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டார்... அத்துடன் குற்றவாளி மீது விரைவாக விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வாங்கி தரப்படும் என்றும் உத்தரவாதம் தந்தார்.. இதையடுத்தே மாணவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்..

நட்பு

நட்பு

இது சம்பந்தமான விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான் இவர்களுக்குள் இருந்தது காதல் இல்லை, வெறும் நட்பு என்றும் தெரியவந்தது. ஆனால் விஷ்ணுதான், இந்த நட்பை தவறாக புரிந்து கொண்டுள்ளார் என்றும், நட்பில் ஏற்பட்ட விரிசலையும் தவறாக நினைத்து இப்படி அநியாயமாக கொன்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.. ஆந்திராவில் இந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகவே இல்லை.

English summary
19 year old college girl student was killed in Andhra Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X