• search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பச்சை துரோகம்.. சினேகாவை தனியாக அழைத்து சென்று.. புதருக்குள் கொடூரம்.. அலறிய அனந்தபூர்..!

|

ஹைதராபாத்: "எனக்கு ஏன் துரோகம் பண்ணே.. நானும் வேணும், அவனும் வேணுமா?" என்று கேட்டு, 19 வயது இளம்பெண்ணை, அவரது முன்னாள் காதலனே தீ வைத்து எரித்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இது சம்பந்தமாக ஆந்திர மாநில போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் சினேகலதா... 19 வயதாகிறது.. இவர் ஒரு தலித் பெண்.. இவர் ராஜேஷ் என்பவரை காதலித்தார்.. ராஜேஷ் ஒரு கொத்தனார்.. அதே பகுதியை சேர்ந்தவர்தான்.. இந்த காதல் ஒரு வருஷமாக நடந்து வந்துள்ளது.

 19 year old girl murdered by boy friend in Andhra Pradesh

இந்நிலையில் தர்மாவரத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சினேகாவுக்கு 2 வாரத்துக்கு முன்பு வேலை கிடைத்துள்ளது.. அக்ரிமென்ட் அடிப்படையில்தான் வேலை கிடைத்திருக்கிறது.. வேலைக்கு போனதில் இருந்தே, ராஜேஷூடன் சினேகா பேசுவது குறைந்து போயுள்ளதாக தெரிகிறது.. இந்நிலையில் நேற்று வேலை முடித்துவிட்டு, வீட்டுக்கு சினேகா வரவே இல்லை.

இதனால் பதறிபோன பெற்றோர், பல இடங்களில் மகளை தேடி பார்த்தனர்.. ஆனால் கிடைக்கவில்லை என்பதால், தர்மாவரம் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில் சினேகாவை போலீசார் தேடி வரும் நிலையில், ஒரு புதருக்குள் ஒரு சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது, இளம்பெண் எரிக்கப்பட்ட நிலையில் அந்த சடலம் கிடந்தது.. இறுதியில் அது காணாமல் போன சினேகா என்றும் தெரியவந்தது.. பிறகு சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பிய போலீசார் விசாரணையையும் ஆரம்பித்தனர்.. முதல் காரியமாக சினேகாவின் செல்போனை எடுத்து ஆய்வு செய்தனர்.. அதில், கடந்த ஒரு வருஷத்தில் மட்டும் 1618 முறை ராஜேஷியிடம் சினேகா பேசி இருப்பது தெரியவந்தது.

பரவும் புதிய கொரோனா, அலட்சியமாக ரயிலில் பயணித்த பிரிட்டனிலிருந்து திரும்பிய கொரோனா நோயாளிபரவும் புதிய கொரோனா, அலட்சியமாக ரயிலில் பயணித்த பிரிட்டனிலிருந்து திரும்பிய கொரோனா நோயாளி

பின்னர் ராஜேஷை பிடித்து போலீசார் விசாரித்தபோதுதான், மொத்த உண்மையையும் சொல்லிவிட்டார்.. ஒரு வருடமாக தீவிரமாக காதலித்து வந்தாள்.. அப்பறம் திடீர்னு என்கிட்ட பேசுறதை குறைச்சுட்டாள்.. என்னால தாங்க முடியல.. நான் இல்லாமல், பிரவீன் என்பவனுடன் பழகுறதும் தெரிஞ்சது.. அதனாலதான் சினேகாவிடம் பேச வேண்டும் என்று சொல்லி தனியாக கூட்டிட்டு போய் எச்சரித்தேன்.

ஆனால், அவ கேட்கல.. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியது.. போய் கழுத்தை நெரித்து கொன்னு, புதருக்குள்ளே போட்டுட்டேன்.. தடயம், எதுவும் இருக்ககூடாது என்பதால், சடலத்தையும் தீ வைத்து கொளுத்திட்டேன்" என்றார்.இதையடுத்து ராஜேஷை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
19 year old girl murdered by boy friend in Andhra Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X