ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுவும் எமோஷனல்தான்.. அதுக்காக உண்மைக்குப் புறம்பா மாற்றி சொல்லலாமா?.. வைரல் படம் குறித்த உண்மை இதோ!

Google Oneindia Tamil News

Recommended Video

    புல்வாமா தாக்குதல்... இன்னமும் விடை தெரியலையே..

    ஹைதராபாத்: ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவில் கடந்த ஆண்டு தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரரின் ஒரு வயது குழந்தை அவரது ஆளுயர புகைப்படத்தை தனது முதல் பிறந்தநாள் அன்று தழுவுவது போன்ற உருக்கமான காட்சிகள் சமூகவலைதளங்களில் பொய்யாக பரப்பப்பட்டு வருகின்றன.

    ஜம்மு காஷ்மீரில் புல்வாமா பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி ராணுவ வாகனங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
    அப்போது அங்கு காரில் வந்த தற்கொலை படை தாக்குதல் நடத்தும் தீவிரவாதி ஒருவன் ஒரு குறிப்பிட்ட ராணுவ வாகனத்தில் வெடிப்பொருள்களுடன் கூடிய காருடன் மோதினான்.

    இந்த சம்பவத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பதிலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்து ஓராண்டு ஆகும் நிலையில் நெஞ்சை உருக்கும் ஒரு காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    கொரோனா வைரஸ்: இது ஒன்றும் கொரோனா வைரஸ்: இது ஒன்றும் "மேட் இன் சீனா" ப்ராடக்ட் அல்ல.. இயற்கையானது.. பூசி மெழுகும் சீன தூதர்

     நெஞ்சை உருக்கும் காட்சிகள்

    நெஞ்சை உருக்கும் காட்சிகள்

    அதாவது ஒரு வீட்டில் ஒரு ஆளுர புகைப்படம் சுவற்றில் மாட்டப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்திற்கு கீழ் ஒரு பெண்ணும் ஒரு சிறிய குழந்தை இருக்கின்றனர். அந்த குழந்தை அந்த புகைப்படத்தை தொட்டு பார்க்கும் காட்சிகள் இருக்கின்றன. அந்த படத்தில் இருப்பவர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் என்றும் அவரது குழந்தை தனது முதல் பிறந்தநாளையொட்டி தந்தையை தடவி பார்க்கிறது என்றும் நெஞ்சை உருக்கும் காட்சிகள் என வைரலாகி வருகிறது.

     ராணுவ வீரர்

    ராணுவ வீரர்

    இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தோமேயானால் இந்த புகைப்படத்திற்காக நெட்டிசன்கள் சொல்லப்படும் காரணம் பொய்யானது. தற்போது உண்மைக்கு புறம்பாக சில விஷயங்கள் பொய்யாக பரப்பப்பட்டு வருகின்றன. அதில் இதுவும் ஒன்று. அதாவது படத்தில் இருப்பவர் சிஆர்பிஎஃப் வீரரும் அல்ல. அந்த படத்திற்கு அருகில் இருக்கும் குழந்தை ராணுவ வீரரின் குழந்தையும் அல்ல.

     பரிசோதனை

    பரிசோதனை

    அந்த படத்தில் இருப்பவர் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரனே. இவர் வேறு ஜாதியை சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் தந்தை பிரனேவை கொல்ல திட்டமிட்டார். இதையடுத்து கர்ப்பிணியான அம்ருதாவை கடந்த 2018-ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் மருத்துவமனையில் பரிசோதனை முடித்துவிட்டு வெளியே வந்தனர்.

     குழந்தை

    குழந்தை

    அப்போது பிரனேவை அம்ருதாவின் தந்தையால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையினர் வெட்டி கொன்றனர். மனைவி கண் முன்பே பிரனே உயிரிழந்தார். இதையடுத்து அம்ருதாவுக்கு கடந்த ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் முதல் பிறந்த நாள் கடந்த மாதம் நடந்து முடிந்தது. புகைப்படத்தில் தன் தந்தை இனி வரவேமாட்டார் என்றும் அறியாமல் தொட்டு பார்க்கும் இந்த குழந்தையின் செய்கையும் மனதை உருக்குகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

    English summary
    A Picture which goes viral in Social media claiming one year old boy touches his father who was killed in Pulwama Attack is wrong. The child is son of Pranay who was killed by his father in law in honour killing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X