ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீன அரசு தடை செய்ததே.. அதே "குட்டி விலங்கு".. ஊருக்குள் வேகமாக ஓடிவந்தது.. ஆந்திராவில் நடந்த சம்பவம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கொரோனா பரவிய தொடக்க காலத்தில் சீனாவில் மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்திய எறும்பு திண்ணி எனப்படும் பாங்கோலின் விலங்கு இன்று ஆந்திர பிரதேசத்தில் பிடிக்கப்பட்டுள்ளது.

பாங்கோலின் என்னும் எறும்பு திண்ணி வகை தெற்காசியாவில் காணப்படும் ஒரு வகை விலங்குகள் ஆகும். சீனர்களின் உணவில் அங்கமாக இந்த எறும்பு திண்ணிகள் உள்ளது. அதே சமயம் எறும்பு திண்ணிகளை விற்பனை செய்யவும், உணவாக சாப்பிடவும் சீன அரசு மூலம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பெரிய அளவில் எறும்பு திண்ணிகள் காணப்படாது. மிக மிக குறைந்த எண்ணிக்கையில் காட்டுப்பகுதியில் மட்டுமே இந்த எறும்பு திண்ணிகள் இந்தியாவில் காணப்படுகிறது.

சீன உணவு

சீன உணவு

சீனர்கள் இதை உணவாக உட்கொள்ளும் நிலையில் இந்தியர்கள் பலர் இதை நேரில் கூட பார்த்தது இல்லை. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் இந்த எறும்பு திண்ணிகளில் இருந்து கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வெளவாலில் எப்படி கொரோனா வைரஸ், நிப்பா வைரஸ் செல்கள் அதிகம் உள்ளதோ அதேபோல். பங்கோலினிலும் மிக அதிக அளவில் வைரஸ் செல்கள் இருக்கிறது.

 வைரஸ் பரவியது

வைரஸ் பரவியது

இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பங்கோலினிடம் இருந்து பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதற்கு நிறைய காரணம் உள்ளது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் டிஎன்ஏ அப்படியே பங்கோலின் உடன் ஒத்துப்போகிறது. கொஞ்சம் வெவ்வால் டிஎன்ஏ, அதிகமாக பங்கோலின் டிஎன்ஏ இதில் காணப்படுகிறது. 90% இதில் பங்கோலின் டிஎன்ஏ இருப்பதை உறுதி செய்து உள்ளனர். இதனால் பங்கோலின் மூலமா கொரோனா பரவி இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது.

ஆந்திரா எப்படி

ஆந்திரா எப்படி

இதை சீனாவில் இதனால் தடை செய்துள்ளனர் . இப்படி பங்கோலின் எனப்படும் எறும்பு திண்ணிகள் மீது ஆராய்ச்சி நடந்து வரும் நிலையில், தற்போது ஆந்திர பிரதேசத்தில் எறும்பு திண்ணி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் பிரகாசம் என்ற மாவட்டத்தில் இந்த எறும்பு திண்ணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் எறும்பு திண்ணிகளை பார்க்க முடியாது.

நினைவு

நினைவு

ஆனால் அந்த மாவட்டத்தில் இருக்கும் லலிதா தேவி கோவிலில் இந்த எறும்பு திண்ணி கண்டுபிடிக்கப்பட்டது. இதை பார்த்ததும் மக்கள் பயந்து ஓடி சென்றனர். கொரோனா பரவல் நினைவிற்கு வந்ததை அடுத்து மக்கள் அங்கிருந்து இதை பார்த்ததும் பயந்து ஓடினார்கள். அதன்பின் வனத்துறைக்கு இந்த எறும்பு திண்ணி குறித்து தகவல் தெரிவித்தனர்.

மீட்டு கொண்டு சென்றனர்

மீட்டு கொண்டு சென்றனர்

இதையடுத்து உடனாடியாக அங்கு வனத்துறையினர் வந்து எறும்பு திண்ணியை மீட்டனர். கூண்டில் அடைத்து இதை கொண்டு சென்றனர். ஊருக்குள் இப்படி எறும்பு திண்ணி வந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எறும்பு திண்ணிகள் உடலில் அதிக அளவில் பல்வேறு வைரஸ்கள் காணப்படுகிறது. இதை எப்படி கையாள வேண்டும் என்று தெரியாமல் கையாண்டால் அது பெரிய ஆபத்தில் முடியும், என்கிறார்கள்.

English summary
A Pangolin rescued in the Andra Pradesh Temple in a small district near Hyderabad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X