ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 41% கொரோனா கேஸ்களுக்கு காரணம் 'ஏ3ஐ' வைரஸ்.. சீனாவிலிருந்து வரவில்லை.. ஆய்வில் பரபர தகவல்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் விஞ்ஞானிகள், இந்தியாவில் கணிசமாக, கிளாட் ஏ 3 ஐ என்ற புதியவகை, கொரோனா வைரஸ் பரவலை கண்டறிந்துள்ளனர். தென் இந்தியாவில் சுமார் 41% கொரோனா கேஸ்கள், இதுபோன்ற வைரசால் உருவானதாக கூறப்படுகிறது.

ஏ 3ஐ சீனா அல்லது ஐரோப்பாவிலிருந்து வந்த வைரஸ் அல்ல, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து பரவியுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

"இந்தியாவில், ஏ3ஐ பெரும்பாலும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவிலும், டெல்லியில் ஒரு சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. குஜராத் அல்லது மகாராஷ்டிராவில் இந்த வகை வைரஸ் அதிகம் காணப்படவில்லை" என்று சிசிஎம்பியின் இயக்குனர் டாக்டர் ராகேஷ் கே மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

கடும் காய்ச்சல்.. ஆக்ஸிஜன் அளவு திடீரென குறைந்தது.. டெல்லி சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அட்மிட்கடும் காய்ச்சல்.. ஆக்ஸிஜன் அளவு திடீரென குறைந்தது.. டெல்லி சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அட்மிட்

தென் கிழக்கு ஆசியாவிலிருந்து

தென் கிழக்கு ஆசியாவிலிருந்து

கொரோனா வைரஸில் ஏற்கனவே அறியப்பட்டவற்றிலிருந்து கிளேட் ஏ3ஐ தனித்துவமானது, ஏனெனில் A3i நான்கு வகைகளால் வரையறுக்கப்படுகிறது. அநேகமாக தென் இந்தியாவில், பிப்ரவரி நடுப்பகுதியில் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து ஏ3ஐ வகை வைரஸ் பரவியிருக்க கூடும். அங்கிருந்து இது இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவில் காணப்படும் கொரோனா கேஸ்களில் 41% க்கும் அதிகமானவை ஏ3ஐ வகையைச் சேர்ந்தவை என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கிளேட் ஏ2ஏ வகை வைரசால் 50%க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் உருவாக்கம்

வைரஸ் உருவாக்கம்

தென்கிழக்கு ஆசிய பிராந்தியமான இந்தியா, சிங்கப்பூர், வியட்நாம், புருனே, பிலிப்பைன்ஸ் போன்றவைதான், இந்த வைரசின் உருவாக்கத்தில் முக்கியமானவை. இந்த பிராந்தியத்தில் இருந்து பிப்ரவரி நடுப்பகுதியில் இந்தியாவை அடைந்ததாக தெரிகிறது. வைரஸ் வேகமாக பரவுவதற்கு இரண்டு முக்கிய காரணிகள் உள்ளன; ஒன்று வைரஸின் மறு உருவாக்கம், மற்றொன்று நபரிடமிருந்து நபர்களுக்கு பரவ, மக்களின் இயக்கம். பெரும்பாலான வைரஸ்கள் மிக வேகமாக மாறுகின்றன.

தென் மாநிலங்களில் குறைந்த வகை வைரஸ்

தென் மாநிலங்களில் குறைந்த வகை வைரஸ்

உண்மையில், SARS-CoV-2 (கொரோனா) மற்ற வைரஸ்களுடன் ஒப்பிடும்போது மெதுவாகத்தான் மாறுகிறது, ஆனால் இது மிக அதிக எண்ணிக்கையில் உள்ளது. ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை பெருகுகிறது. எங்கள் ஆய்வில் நாம் கவனித்த விஷயம் என்னவென்றால், A3i இன் மாற்ற விகிதம் A2a போன்ற பிற வைரஸ் இனங்களைவிட மெதுவாக உள்ளது.

அறிகுறி இல்லை

அறிகுறி இல்லை

இருப்பினும் இதை சரிபார்க்க குறிப்பிட்ட சோதனைகளை நாம் செய்ய வேண்டியுள்ளது. இந்த வகை வைரஸ் குறைவான செயல்திறன் கொண்டது என்பதால்தான், அறிகுறிகளை காட்டுவதில்லை அல்லது குறைவான அறிகுறி கொண்டதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. அது உண்மையாக மாறிவிட்டால், அது நமக்கு ஒரு நல்ல செய்தி.

இறப்புகள் வைரஸ் வகைகள் தொடர்பு

இறப்புகள் வைரஸ் வகைகள் தொடர்பு

வைரஸ் வகைகள் மற்றும் இறப்பு விகிதம் என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதை உறுதி செய்ய இப்போதைக்கு தரவு எதுவும் கிடைக்கவில்லை. ஏனென்றால் வைரஸ்களை வரிசைப்படுத்துதல் வெவ்வேறு குழுக்களால் செய்யப்படுகிறது. இறப்பு சம்பவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. இரண்டுக்குமான தொடர்பை அறிய அதிக ஆய்வு தேவை.

பிற நாடுகள்

பிற நாடுகள்

நாங்கள் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து தரவுகளை சேகரித்து வருகிறோம். ஓரிரு வாரங்களில், இறப்புக்கும், வைரஸ் வகைக்கும் ஏதாவது தொடர்பு இருந்தால் அதிலிருந்து சில ஐடியா கிடைக்கும். தற்போதுள்ள 10 வகை வைரஸ்கள் மற்றும் இறப்பு விகிதம் இடையே, வித்தியாசங்கள் இல்லை என்பது பிற நாட்டு டேட்டாக்கள் நமக்கு காட்டும் பாடம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Scientists at the Centre for Cellular and Molecular Biology, Hyderabad, discovered a new strain of the novel coronavirus, Clade A3i, that has already infected around 41% of the cases in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X