India
  • search
ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரபல நடிகையுடன் ஹோட்டல் ரூமில், சிக்கிய டாப் நடிகர்.. சிரித்துக் கொண்டே வெளியே வந்து.. அட கடவுளே

Google Oneindia Tamil News

ஹைதரபாத்: நடிகையுடன் ஒரே ரூமில் தங்கியிருந்தபோது, மனைவியிடம் கையும், களவுமாக சிக்கி கொண்டுவிட்டார் பிரபல நடிகர்.. இதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

தெலுங்கின் பிரபலமான நடிகர் நரேஷ்.. இவர் ஹீரோவாகவும், கேரக்டர் நடிகராகவும் வலம் வருபவர்.. இவர் அங்குள்ள சீனியர் நடிகரான கிருஷ்ணா - சீனியர் நடிகை விஜயநிர்மலாவின் மகன் ஆவார்.

வீடியோ இருக்கு! காட்டட்டுமா? எதுவும் செல்லாது! உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வைத்த செக்! பரபரப்பு வாதம் வீடியோ இருக்கு! காட்டட்டுமா? எதுவும் செல்லாது! உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வைத்த செக்! பரபரப்பு வாதம்

தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவின் சகோதரரும் கூட... குடும்பமே நட்சத்திர பின்னணி கொண்டது என்பதால், ஆரம்பம் முதலே பிரபலமானவராக திகழ்ந்தார்.. தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து கொண்டவர்.

 நடிகர் நரேஷ்

நடிகர் நரேஷ்

இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது.. ஆனால் மனைவியை பிரிந்துவிட்டார்.. பிறகு 2வது திருமணம் நடந்தது.. அந்த மனைவியையும் பிரிந்துவிட்டார்.. பிறகு 3வது திருமணம் நடந்தது.. அந்த மனைவி பெயர் ரம்யா.. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.. ஆனால், ரம்யாவுடனும் தகராறு செய்து வருகிறார் நரேஷ்.. சமீப நாட்களாக தம்பதி இடையே விரிசல் ஏற்பட்டது.. இப்போது 4வது கல்யாணத்துக்கு ரெடியாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

 நடிகை பவித்ரா

நடிகை பவித்ரா

தெலுங்கு, கன்னடத்தில் பிரபலமான நடிகையான பவித்ராவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.. பவித்ராவும் இந்த திருமணத்துக்கு தயாராகி வருகிறார் போலும்.. இந்நிலையில், நரேஷும், பவித்ரா லோகேஷும், மைசூரின் ஹுன்சூர் சாலையில் உள்ள, ஹோட்டலில் ஒரே ரூமில் தங்கியிருக்கிறார்கள்.. இந்த விஷயம், 3வது மனைவி ரம்யாவுக்கு தெரிந்துவிட்டது.. அதனால், கணவரையும், நடிகையையும் கையும், களவுமாக பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்து, நைட்டோடு நைட்டாக ஹோட்டலுக்கு வந்தார்..

 ஹோட்டல் ரூம்

ஹோட்டல் ரூம்

அந்த ரூமின் காலிங் பெல்லை அழுத்தினார்.. ஆனால், கதவு திறக்கப்படவில்லை.. எந்நேரம் ஆனாலும் பரவாயில்லை, அங்கிருந்து போகக்கூடாது என்று முடிவு செய்து, இரவெல்லாம் ரூமுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார் ரம்யா.. இந்த விஷயம் அதற்குள் மீடியாவுக்கு தெரிந்துவிட்டது.. போலீசுக்கும் தெரிந்துவிட்டது.. இரு தரப்பினருமே ஹோட்டலுக்கு விரைந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இது எதுவுமே தெரியாத, நரேஷூம், ரம்யாவும், மறுநாள் காலை ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தனர். அப்போது ரம்யா, கோபத்தில் சந்திரமுகியாக காட்சி தந்தார்..

 நடிகர் டான்ஸ்

நடிகர் டான்ஸ்

காலில் கிடந்த செருப்பை கழட்டி, அவர்களை அடிக்க பாய்ந்தார்.. வாயில் வந்த கெட்ட வார்த்தையை எல்லாம் திட்டி தீர்த்தார்.. அங்கிருந்த போலீசாரோ, ரம்யாவை தடுத்து நிறுத்தினர்.. ஆனால், மனைவி கையும் களவுமாக பிடித்தும், போலீஸ், மீடியா அங்கு திரண்டும், நரேஷ் எதுவுமே ஷாக் ஆகவில்லை.. கூலாக இருந்தார்.. ரம்யாவை பார்த்து, "நீ மோசக்காரி, பொய்க்காரி" என்று சொன்னார்.. அதுமட்டுமல்ல, அங்கேயே டான்ஸ் ஆடி, விசில் அடித்தார். பிறகு பவித்ராவின் கையை பிடித்து கொண்டு, லிப்டில் கீழே வந்தார்... அவர் பாட்டுக்கு வெளியே வந்து, காரை எடுத்துக் கொண்டு, சிரித்துக் கொண்டே, பவித்ராவுடன் கிளம்பி சென்றுவிட்டார்..

 நடிகரால் பரபரப்பு

நடிகரால் பரபரப்பு

இவ்வளவும் நடந்த பிறகு, ரம்யாவின் ஆத்திரம் அடங்கவில்லை.. "இதுகுறித்து செய்தியாளர்களிடம் ரம்யா சொல்லும்போது, "கையும், களவுமாக மாட்டிக்கிட்டார்.. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தர்மசங்கடம் அவருக்கு வந்துவிட்டது.. அதனால்தான் சிரித்து கொண்டே போகிறார்.. கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை.. இதுதான் எனக்கு கிடைத்த முதல் வெற்றி.. எனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்..நான் இதை எதிர்த்து கோர்ட்டில் சட்டரீதியாக போராடுவேன்.. இந்து மதத்தில் பிறந்தவள் நான்.. இந்த கலாசாரத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்...

 நரேஷ் திருமணம்

நரேஷ் திருமணம்

எனக்கு விவாகரத்து தேவையில்லை. கஷ்டம், சுகங்களை அனுபவித்து வாழ்கிறேன்.எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு அப்பா-அம்மா 2 பேருமே வேண்டும். என் குடும்பத்தின் அரசியல் பின்னணியை பார்த்துதான் என்னை நரேஷ் திருமணம் செய்து கொண்டார்.. ஆனால் அவருக்கு அரசியல் ரீதியில் உதவவில்லை என்பதால், எனக்கு இன்று இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பவித்ரா கழுத்தில் போட்டிருந்த வைர நெக்லஸ், என்னுடைய மாமியாருடையது... 2014ல் அவர் இதை வாங்கினார்... ஒவ்வொரு பிறந்த நாளுக்கும், தங்க நகை வாங்குவார்... வைர நெக்லசை அவர் அணிந்திருந்தபோது, நான் பார்த்திருக்கிறேன்" என்றார்.

 நடிகை மறுப்பு

நடிகை மறுப்பு

ஆனால், இநத் குற்றச்சாட்டை பவித்ரா மறுத்துள்ளார்.. "நான் ஒரு நடிகை. எனக்கு தேவையான பொருட்களை வாங்கும் சக்தி எனக்கு இருக்கிறது.. தங்க நகைகள் மட்டுமின்றி, பிளாட், வீட்டுமனைகள் போன்ற பல சொத்துகளையும் வாங்கியுள்ளேன்... இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது... நான் பெங்களூரில் தான் தங்க நகைகளை வாங்குவேன். எனக்கு யாரும் பரிசளிக்கவில்லை.. நடிகர் நரேஷை, நான் நான்காவதாக திருமணமும் செய்யவில்லை; விவாகரத்தும் நடக்கவில்லை..

தொடர்பு உள்ளதா?

எங்கள் இருவர் இடையே இருப்பது வெறும் நட்பு மட்டுமே. ஆனால், அவரது மனைவி ரம்யா, என் மீது வேண்டும் என்றே பழி சுமத்துகிறார்... 4 ஆண்டாக எனக்கும், நரேஷுக்கும் பழக்கம். நான் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அவரும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இருவரும் இணைந்து நான்கைந்து படங்களில் பணியாற்றி உள்ளோம். அதை தவிர வேறொன்றும் இல்லை.நான், பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளேன். அப்படியானால் எல்லோருடனும் எனக்கு தொடர்பு உள்ளதா?

அண்ணன்

அண்ணன்

என் கணவரான சுசீந்திர பிரசாத்தை திருமணம் செய்யும் போது, அவரது பாக்கெட்டில் பணமே இல்லை. வீடு, கார் என எதுவும் இல்லை. அப்படி இருந்தும், 11 ஆண்டுகள் அவருடன் இருந்தேன்... கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். என் கணவர் நல்ல மனிதர்... எங்கள் இருவரிடையே நல்ல நட்பு இப்போதும் தொடர்கிறது. நரேஷ், பல நடிகைகளுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். எல்லாருடனும் அவரை தொடர்புபடுத்தி பேச முடியுமா? அவர் எனக்கு அறிமுகமாகும் போது, பெரிய நடிகரின் மகன்.. மகேஷ் பாபுவின் அண்ணன் என்பது எனக்கு தெரியாது. ஒன்றாக பணியாற்றிய போது தான் நண்பர்களானோம். ஒருவருக்கு ஒருவர் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.

 சைபர் கிரைம்

சைபர் கிரைம்

வீட்டில் யாரும் இல்லை என்று என்னிடம் தெரிவித்தார். அவர் மக்கள் செல்வாக்கு மிக்கவர். பிறருடைய பிரச்னையை தீர்ப்பார்... ரம்யா ரகுபதி, அவரது கணவருடன் சென்று இருக்கலாம் அல்லவா. அவர்களது விவகாரத்தில் என்னை ஏன் இழுக்க வேண்டும்? என் கணவரிடம் விவாகரத்து பெறுவதும், விடுவதும் என் பிரச்னை. அதை நானே தீர்த்து கொள்வேன். சமூக வலைதள பிரச்னை தொடர்பாக, சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன். ரம்யா ரகுபதியை இதுவரை பார்த்தது கூட கிடையாது" என்றார்.

English summary
actor nareshs wife Ramya Raghupathi tries to attack him and Pavithra Lokesh at Mysore hotel பிரபல நடிகரை ஹோட்டலில் சரமாரியாக தாக்கியுள்ளார் அவரது 3வது மனைவி
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X