ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமேசிங்.. உலகிலேயே பெரிய அமேசான் அலுவலகம்.. ஹைதராபாத்தில் திறக்கப்பட்ட ராட்சச கட்டிடம்!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உலகில் மிகப்பெரிய அமேசான் நிறுவன கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மார்க்கெட்டிங் உலகில் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. அதிகப்படியான மக்கள் தொகை காரணமாக இந்தியா மீது உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்த நிறுவனங்கள் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டை வால்மார்ட் நிறுவனம் 16 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.

என்ன போட்டி

என்ன போட்டி

இந்த நிலையில் வால்மார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக தற்போது அமேசான் நிறுவனம் இந்தியாவில் 5.5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதன் ஒருகட்டமாக ஹைதராபாத்தில் மிகப்பெரிய அமேசான் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

என்ன

என்ன

அமெரிக்காவிற்கு வெளியே அமேசான் சொந்தமாக கட்டும் முதல் அலுவலகம் ஆகும் இது. இதில் மொத்தம் 15000 பணியாளர்கள் வேலை செய்ய முடியும். இது மொத்தம் 1.8 மில்லியன் சதுர அடியில் அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதை கட்ட மூன்று வருடங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.

எப்படி பெரியது

எப்படி பெரியது

உலகிலேயே சதுர அடி கணக்கில் மிகப்பெரிய அமேசான் அலுவலகம் இதுதான். அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் உள்ள அமேசான் தலைமையகத்தில் கூட 5000 பேர்தான் வேலை பார்க்கக் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டிடம் பார்ப்பதற்கே கண்ணை கவரும் வகையில் உள்ளது.

எப்படி

எப்படி

மொத்தம் இந்த அலுவலகம் 9.5 ஏக்கரில் உள்ளது. ஹைதராபாத்தில் நானாகிராம்குடாவில் இது அமைந்துள்ளது. தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூத் அலி இதை இன்று திறந்து வைத்தார். இங்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதை இன்னும் சில நாட்களில் விரிவுபடுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Amazon opens its World largest building in Hyderabad Telangana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X