ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரிவில் தெலுங்கு தேசம்.. ஆந்திர முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சந்திரபாபு நாயுடு!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இரு தேர்தல்களிலுமே முன்னிலை பெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 24 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்! 3 சென்னையையும் தூக்கி திமுக வாரிசுகளிடம் கொடுத்த மக்கள்!

ஒரே ஒரு இடம்

ஒரே ஒரு இடம்

அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டும் முன்னிலையில் உள்ளது. அங்கும் வாக்கு வித்தியாசம் பெரிதாக இல்லை என்பதால் ஒய்எஸ்ஆர் காங்கிரசுடன் கடுமையான போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

டிடிபிக்கு பின்னடைவு

டிடிபிக்கு பின்னடைவு

இதேபோல் 175 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 145 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 29 சட்டப்பேரவை தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவே ஒரு பக்கம் நிற்க.. தனித்து நின்று வேறுபடும் தமிழகம்.. பாஜகவை மொத்தமாக புறக்கணித்தது! இந்தியாவே ஒரு பக்கம் நிற்க.. தனித்து நின்று வேறுபடும் தமிழகம்.. பாஜகவை மொத்தமாக புறக்கணித்தது!

வாய்ப்பு பிரகாசம்

வாய்ப்பு பிரகாசம்

பாஜக மற்றும் ஜன சேனா கட்சிகள் தலா ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன. 147 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளதால். அக்கட்சியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

சந்திரபாபு நாயுடு ராஜினாமா

சந்திரபாபு நாயுடு ராஜினாமா

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் பெரும் பின்னடைவை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரம்பூரில் மக்கள் நீதி மய்யம் அபாரம்.. அதிமுகவுடன் கடும் போட்டி.. அமமுக வெற்றிவேல் பரிதாபம் பெரம்பூரில் மக்கள் நீதி மய்யம் அபாரம்.. அதிமுகவுடன் கடும் போட்டி.. அமமுக வெற்றிவேல் பரிதாபம்

ஜெகன் முதல்வர்

ஜெகன் முதல்வர்

இன்று மாலை சந்திரபாபு நாயுடு அம்மாநில ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என தெரிகிறது. இதைத்தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராவார் என கூறப்படுகிறது.

பாஜகவுக்கு எதிராக..

பாஜகவுக்கு எதிராக..

பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இதற்காக ராகுல்காந்தி, மமதா பானர்ஜி, அகிலேஷ்யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் என பலரையும் அவர் தொடர்ந்து சந்தித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Andhra pradesh c‪hief Minister Chandra babu naidu resigns his CM post due to setback in assembly poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X