ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்க அதிரடியை அப்துல் கலாமிடம் காட்டலாமா ஜெகன் மோகன் ரெட்டி? இப்போ என்ன ஆச்சின்னு பாருங்க!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற நாளில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்று வருகிறார்.

ஆனால், அங்கே தொட்டு, இங்கே தொட்டு.. அப்துல்கலாம் பெயரிலேயே கைவைத்தால் எப்படி? ஆனால் அப்படி ஒரு நடவடிக்கையை தான் ஜெகன்மோகன் ரெட்டி எடுத்துள்ளார். இருப்பினும் மக்களின் எதிர்ப்புக் குரலை தாங்க முடியாமல் அந்த உத்தரவை வாபஸ் பெற்றுக்கொண்டார் சூட்டோடு சூடாக.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறக்கூடிய மாணவ மாணவிகளுக்கு நவம்பர் 11ஆம் தேதி தேசிய கல்வி நாள் தினத்தன்று மெரிட் சர்டிபிகேட்டுகள், மற்றும் உயர் கல்விக்கான ஸ்காலர்ஷிப் போன்றவை வழங்கக்கூடிய திட்டம் ஆந்திராவில் அமலில் உள்ளது.

ரூ7,000 கோடி வங்கி மோசடிகள்.. சென்னை, கோவை, மதுரை உள்பட நாடு முழுவதும் சிபிஐ 169 இடங்களில் ரெய்டு!ரூ7,000 கோடி வங்கி மோசடிகள்.. சென்னை, கோவை, மதுரை உள்பட நாடு முழுவதும் சிபிஐ 169 இடங்களில் ரெய்டு!

அப்துல் கலாம்

அப்துல் கலாம்

இந்த விருதுக்கு பிரதீபா விருதுகள் என்று பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுக்கு 'ஏபிஜே அப்துல் கலாம் பிரதீபா புரஸ்கார் விருதுகள்' என்று பெயர் மாற்றம் செய்து, அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். ஆனால், ஜெகன் மோகன் ரெட்டியின் 'ஒய்எஸ்ஆர் வித்யா புரஸ்கார்ஸ்' என்று இந்த விருதின் பெயரை மாற்றி ஒரு உத்தரவை அதிரடியாக பிறப்பித்து விட்டார்.

சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு

சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு

ஆனால் நாடு முழுக்க அப்துல்கலாமுக்கு ஏகப்பட்ட ஆதரவாளர்கள் இருப்பது நாம் அறிந்ததே. ஆந்திராவிலும் அதேபோலத்தான். சமூகவலைத்தளங்களில் தெலுங்கு நெட்டிசன்கள் ஜெகன்மோகன் ரெட்டி அரசு எடுத்த இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தனர். முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடுவும் கூட, டிவிட்டரில் விமர்சித்தார். தங்களது சுயலாபத்திற்காக, சொந்த புகழை நிலைநிறுத்துவதற்காக ஜெகன்மோகன் ரெட்டி அரசு செய்துள்ள இந்த நடவடிக்கை என்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

உந்து சக்தியான கலாம்

உந்து சக்தியான கலாம்

அப்துல் கலாம் இந்த நாட்டுக்காக நிறைய பங்களிப்புகளை தந்துள்ளார். இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றிப் போடும் அளவுக்கு உந்து சக்தியாக இருந்துள்ளார். எனவேதான் அவரது பெயரில் விருது வழங்க ஆரம்பித்தோம். ஆனால், அப்படி ஒரு மாமனிதரை அவமானப்படுத்தும் வகையில் சொந்த புகழ்ச்சிக்காக ஜெகன்மோகன் ரெட்டி ஒரு ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார், என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.

பாஜகவும் விமர்சனம்

பாஜகவும் விமர்சனம்

மூத்த பாஜக தலைவர் அமித் மால்வியா இந்த விஷயத்தில் காங்கிரசையும் சேர்த்து விளாசி விட்டார். அவர் கூறுகையில், பாரத ரத்னா விருது பெற்ற, டாக்டர் அப்துல் கலாமை விட, தனது தந்தை, மேம்பட்ட விஞ்ஞானி மற்றும் கல்வியாளர் என்று, ஜெகன்மோகன் ரெட்டி நினைத்துக் கொண்டு உள்ளார் போலும், இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் கிடையாது.

பழையபடியே பெயர் மாற்றம்

ஏனெனில் அவரது கட்சி நாட்டிலுள்ள அத்தனை திட்டங்களுக்கும், விளையாட்டு மைதானங்கள், சாலைகளுக்கும், விமான நிலையங்களுக்கும் தங்களது குடும்பத்தினர் பெயரை சூட்டிக் கொண்ட காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த ஒரு கட்சிதானே.. அப்புறம் அப்படித்தான் அவர் யோசிப்பார். இவ்வாறு அமித் மால்வியா குற்றம் சாட்டினார். இவ்வாறு பல மட்டங்களில் இருந்தும் எதிர்ப்புகள் வலுப்பெற்று வந்ததால், உடனடியாக தனது உத்தரவை வாபஸ் பெற்றுக் கொண்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பழையபடி, 'டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பிரதீபா புரஸ்கார் விருதுகள்' என்று இந்த விருது அழைக்கப்படும் என்று உத்தரவை பிறப்பித்துள்ளார்.

English summary
Andhra Pradesh Chief Minister YS Jaganmohan Reddy has ordered to immediately cancel the concerned GO (Government Order). He further ordered to reinstate the name of 'Dr APJ Abdul Kalam Pratibha Puraskar Awards'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X