ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீரென எழும் "விசித்திரமான" கூச்சல்.. பீதியை கிளப்பும் மர்ம நோய்.. குழப்பத்தில் "எலுரு" மக்கள்!

ஆந்திராவின் எலுரு பகுதியில் மர்ம நோய் தாக்கி உள்ளது

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: விசித்திரமான கூச்சலை எழுப்பி, அப்படியே மயங்கிவிழுந்து விடுகிறார்கள் ஆந்திராவின் எலுரு பகுதி மக்கள்.. இவர்களை பீடித்த நோய் என்னவென்றே தெரியாமல் டாக்டர்களும் விழிபிதுங்கி வருகிறார்கள்.

Recommended Video

    ஆந்திராவை ஆட்டி படைக்கும் மர்ம நோய்.. காரணம் கண்டுபிடியுங்கள்… ஜெகன் மோகன் உத்தரவு..!

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் எலுரு பகுதியில் பொதுமக்கள் பலர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 6-ம் தேதி முதலே அவர்களை ஒரு நோய் தாக்கி வருகிறது. இது என்ன நோய் என்று இன்னும்கண்டுபிடிக்க முடியவில்லை. முதலில் வாந்தி வந்துள்ளது.. பிறகு வலிப்பு நோய்க்கான அறிகுறிகள் தெரிந்துள்ளது..

    சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் ஜெகன் பரபரப்பு புகார்.. தலைமை நீதிபதிக்கு கடிதம் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் ஜெகன் பரபரப்பு புகார்.. தலைமை நீதிபதிக்கு கடிதம்

     கூச்சல்

    கூச்சல்

    இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விசித்திரமான கூச்சலை எழுப்புகிறார்களாம்.. அது ஓலமிடுவது போல இருக்கிறதாம்.. பிறகு அப்படியே மயங்கி கீழே விழுந்து விடுகின்றனர். இவர்கள்தான் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கிட்டத்தட்ட 600 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. 330 பேர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர்.. ஸ்ரீதர் என்ற 45 வயது நபர் இந்த நோயால் இறந்தே விட்டார்.

     சாப்பாடு

    சாப்பாடு

    கடந்த 6-ம் தேதியில் இருந்தே இப்படி ஒரு பீதி எலுரு பகுதியில் நிலவுகிறது.. இப்படி பாதிக்கப்பட்டவர்கள் யாரும் எங்குமே வெளியில் செல்லவில்லை.. அதாவது வெளியூருக்கும் போகவில்லை, நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவுமில்லை.. அதனால் சாப்பாட்டு பிரச்சனையால் இந்த பாதிப்பு வந்ததாக சொல்ல முடியாது.. அதேசமயம், இது என்ன நோய் என்று டாக்டர்களே மண்டையை பிய்த்து கொண்டு உள்ளனராம்.

     எபிலெப்சி

    எபிலெப்சி

    அநேகமாக எபிலெப்சி நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறார்கள்... அதனால், ஸ்பெஷல் மெடிக்கல் டீம் என்று எலுருவிற்கு சென்றுள்ளனர்.. அவர்கள்தான் இது சம்பந்தமான விசாரணை மற்றும் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். இப்போதைக்கு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை நடந்து வருகிறது.. அவர்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசி ஆறுதல் சொன்னார்.. டாக்டர்களிடம் அவர்களின் நிலை பற்றி கேட்டறிந்தார்..

     தண்ணீர்

    தண்ணீர்

    ஒருவேளை அவர்கள் குடித்த தண்ணீரில் பூச்சிக்கொல்லி மருந்து ஏதேனும் கலந்திருக்கலாம் என்கிறார்கள் எய்ம்ஸ் டாக்டர்கள்.. இதையடுத்து, விஜயவாடாவில் அந்த பகுதியில் உள்ள நீரை எடுத்து டெஸ்ட் செய்தனர்.. அதில், குடிநீரில் டைகுளோரோ டைபீனைல் டை குளோரோ ஈத்தேன் என்ற வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ரிசல்ட்

    ரிசல்ட்

    பொதுமக்கள் குடித்த அந்த நீரில் கலரும் மாறியிருந்ததாம்.. வீட்டில் குழாயில் வரும் தண்ணீரும் நிறம் மாறி வந்திருக்கிறது.. இருந்தாலும், அடுத்தகட்ட ஆய்விற்கு பரிசோதனைகள் சென்றுள்ளன.. அந்த ரிசல்ட்டும் வந்தால்தான், இதுகுறித்து முழுமையாக தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.

    English summary
    Andhra Pradesh Eluru Mystery disease
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X