"அந்தரங்க உறுப்பு".. மனைவி பிரிந்ததால் பகீர் முடிவு எடுத்த இளைஞர்.. லாட்ஜில் ஒரே பரபரப்பு
ஹைதராபாத்: மனைவி பிரிந்து போனதால், உச்சக்கட்ட விரக்தி அடைந்த இளைஞர் ஒருவர், யூடியூப் வீடியோவைப் பார்த்து பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முயன்ற சம்பவம் விபரீதத்தில் போய் முடிந்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்தது.. அங்குள்ள ஒரு தனியார் லாட்ஜில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் பறந்தது.
இதையடுத்து, போலீசாரும் சம்பந்தப்பட்ட லாட்ஜூக்கு விரைந்து வந்தனர்.. அப்போது உயிரிழந்த சடலத்தின் அருகே மேலும் 2 இளைஞர்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்..
விஷம பிரச்சாரம்: 35 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு.. காரணம் என்ன?

விசாரணை
சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், 2 இளைஞர்களையும் பிடித்து உடனடியாக விசாரணையையும் ஆரம்பித்தனர். உயிரிழந்தவர் பெயர் ஸ்ரீகாந்த், வயது 28 பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.. அத்துடன், கைதான 2 பேருமே பி.பார்மா மாணவர்கள் மஸ்தான், ஜீவா என்பதும் விசாரணையில் வெளிவந்தது.. ஸ்ரீகாந்த் ஐதராபாத்தில் வேலை செய்து வந்திருக்கிறார்..

தனிமை
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது.. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி இவரை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டார்.. மனைவி இல்லாத நிலையில், தனிமையில் தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று நண்பர்கள் ஜீவா, மஸ்தானிடம் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ரீகாந்த்.. இது தொடர்பான ஆபரேஷன் செய்து கொள்ள மும்பைக்கு போக போவதாகவும் சொல்லி உள்ளார்..

ஆபரேஷன்
ஆனால், நண்பர்களோ, இதுக்காக எதுக்கு மும்பை போகணும்? இந்த ஆபரேஷனை தாங்களே மலிவான விலையில் செய்து விடுகிறோம் என்று சொல்லி ஸ்ரீகாந்த்தை சமாதானப்படுத்தி உள்ளனர். இதையடுத்து, ஆபரேஷன் செய்ய ஒரு லாட்ஜ்ஜில் ரூம் எடுத்துள்ளனர்.. 3பேருமேஅந்த லாட்ஜில் தங்கி உள்ளனர்.. 2 பிபார்ம் மாணவர்கள் யூடியூப்பில் ஒரு வீடியோவை பார்த்து ஆபரேஷனை ஆரம்பித்தனர்.. ஆனால், ஆபரேஷன் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஸ்ரீகாந்த்துக்கு அதிகமாக ரத்தம் கொட்ட ஆரம்பித்துள்ளது..

அதிர்ச்சி
அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக ஸ்ரீகாந்த் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது. ஸ்ரீகாந்த் போட்ட சத்தத்தை கேட்டுதான், லாட்ஜ் ஊழியர்கள் ரூமுக்குள் சென்று பார்த்துள்ளனர்.. அங்கு இறந்த நிலையில் இருந்த ஸ்ரீகாந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு போலீசாருக்கும் தகவல் கொடுத்தது தெரியவந்தது.. இப்போது கைதான மாணவர்களிடம் தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது..

விசாரணை
இந்த ஆபரேஷன் நடக்கும்போது, ஸ்ரீகாந்திற்கு அதிக மயக்க மருந்தும் மாணவர்கள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.. இந்த மயக்க மருந்து அதிகமானதால் ரத்தக்கசிவும் அதிகமாகிவிட்டதாக முதல்கட்டமாக தெரியவந்துள்ளது... மனைவி பிரிந்து போனதால் விரக்தியான ஒருவர் யூடியூப் வீடியோவைப் பார்த்து பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முயன்று உயிரிழந்த சம்பவம் நெல்லூரையே நடுங்க வைத்துள்ளது.