ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000.. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் அறிவிப்பு

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் பிளாஸ்மாக்களை பயன்படுத்தி, தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நல்ல பலன் கிடைப்பதால், தொற்றிலிருந்து மீள்பவர்கள் பிளாஸ்மா தானம் செய்யவும் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

Andhra Pradesh: Plasma donars will get Rs 5,000, says Chief Minister YS Jagan Mohan Reddy

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த பணத்தை பயன்படுத்தி, அவர்கள் சத்துமிக்க உணவுகளை வாங்கிக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா.. என்ன செய்வதென புரியாமல் கைவிட்ட பெங்களூர் மாநகராட்சி.. சென்னை எவ்வளவோ பெட்டர்அதிகரிக்கும் கொரோனா.. என்ன செய்வதென புரியாமல் கைவிட்ட பெங்களூர் மாநகராட்சி.. சென்னை எவ்வளவோ பெட்டர்

Recommended Video

    Jagan Mohan Launched 52 New Mobile COVID-19 Testing Buses

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திராவில் கடந்த 3 நாட்களாக தினமும் 10,000த்திற்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அங்கு இதுவரை 1,40,933 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அம்மாநிலத்தில் 1,349 பேர் பலியாகி உள்ளனர்.

    English summary
    Chief Minister YS Jagan Mohan Reddy has announced that, plasma donars will get Rs 5,000 as an incentive.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X