ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரிந்து போன இந்த அண்ணன்-தம்பிகள் தான்.. இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்க போறாங்க

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவின் வெற்றியை தீர்மானிக்க போகும் 3 மாநிலங்கள்- வீடியோ

    ஹைதராபாத்: ரத்தமும் சதையுமாக இருந்த அண்ணன் தம்பிகள் பிரிந்தாலும் அவர்கள் சொல்பர்கள் தான் இந்த நாட்டின் பிரதமராக வரப்போகிறார்கள். ஆம்.. தெலுங்கானா, ஆந்திரா மக்களே இந்தியாவின் பிரதமர் யார் என்பதை இந்த முறை தீர்மானிக்கப் போகிறார்கள்.

    மற்ற மாநிலங்களில் எல்லாம் கூட்டணிக்காக கதவுகளை திறந்துவைத்து ஆட்களை உள்ளே இழுத்துபோட்ட காங்கிரஸ் பாஜகாவால் இந்த இரண்டு மாநிலங்களில் சாரி, ஒருங்கிணைந்த ஆந்திராவில கூட்டணிக்காக கால் வைக்கவே முடியவில்லை.

    தெலுங்கானாவில் 17 மக்களவை தொகுதிகளும், ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளும் உள்ளன. ஆக மொத்தம் 42 தொகுதிகள் உள்ளன. எனவே இவர்கள் தான் இந்தமுறை பிரதமர் யார் என்பதை தீர்மானிக்க போகிறார்கள்.

    காவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா.. நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.. டெல்லியில்! காவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா.. நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.. டெல்லியில்!

    கலவர பூமி

    கலவர பூமி

    எப்படி என்பதை ராஜசேகர் ரெட்டியின் மறைவில் இருந்து சொன்னால் தான் சரியாக இருக்கும் என்பதால் அதில் இருந்தே ஆரம்பிக்கிறேன். முதல்வர் ராஜசேகர் ரெட்டி மறைவுக்கு பின் வலிமையான தலைவர் ஆந்திராவில் இல்லாததால், திடீரென தெலுங்கானா கோரிக்கையை எழுப்பி சந்திரசேகர் ராவ் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் ஆந்திராவில் பிரளயத்தை ஏற்படுத்தியது. ஒருபக்கம் ஜெகன்மோகன் ரெட்டியும் தன்னை சிஎம் ஆக்காத காங்கிரஸ் கட்சிக்கு குடைச்சல் கொடுத்தார்.

    ஆந்திராவில் போராட்டம்

    ஆந்திராவில் போராட்டம்

    கடைசியில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தலைநகர் ஹைதராபாத் பற்றி எரிந்தது. ஒட்டுமொத்த தெலுங்கானாவும் கலவர பூமியாக மாறியது. 500க்கும் மேற்பட்டோர் தீக்குளித்தனர்.இதன் அபாயத்தை முதலிலேயே உணராத அன்றைய மத்திய அரசு, நிலைமை கை மீறி போன பின்னர், தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிக்கப்படும் என அறிவித்தது. இதனால் அதுவரை அமைதியாக இருந்த ஆந்திர மக்கள் பிரிக்கக்கூடாது என தங்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர். இதனால் ஆந்திராவும் கலவர பூமியாக மாறியது.

    காணாமல் போன காங்கிரஸ்

    காணாமல் போன காங்கிரஸ்

    எனினும் சொன்னபடி 2014ம் ஆண்டு தெலுங்கானா ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக ஆந்திரா மாநிலமும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக வெறுத்தது. கடைசியில் அந்த கட்சியை தேடி பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரி சமிதியும், ஆந்திராவில் சந்திபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசமும் ஆட்சியை பிடித்தன.

    ராவ்க்கு வாய்ப்பு

    ராவ்க்கு வாய்ப்பு

    இப்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் ஆந்திராவின் எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இருவருமே அவரவர் மாநிலத்தில் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் வந்துள்ளன.

    பிரதமரை தீர்மானிப்பார்கள்

    பிரதமரை தீர்மானிப்பார்கள்

    இதற்கிடையில் மற்ற மாநிலங்களில் எல்லாம் வலிமையான கூட்டணியில் உள்ள காங்கிரஸ்- பாஜக கட்சிகளால் இந்த முறை ஆந்திரா தெலுங்கானாவில் கூட்டணியை அமைக்க முடியவில்லை. எனவே மெஜாரிட்டி கிடைக்காத சூழலை சந்தித்தால் அப்போது ஆந்திரா, தெலுங்கானாவே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்பார்கள். எனவே இந்த முறை பிரதமரை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கப்போவது ஒருங்கிணைந்த ஆந்திராவில் உள்ள அண்ணன் தம்பிகள் தான்.

    English summary
    lok sabha elections result 2019 ; Andhra- telangana people will decide, who will become prime minister of india in 2019
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X