ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகளை எதிர்த்து 200 விவசாயிகள் வேட்புமனு தாக்கல்- தெலுங்கானா முதல்வர் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக விவசாயிகள் வேட்பு மனுதாக்கல் செய்யும் நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவை எதிர்த்து 200 விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில மஞ்சள் மற்றும் சோளம் பயிரிடும் விவசாயிகள் 200 பேர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு எதிராக போட்டியிடுகின்றனர்.

Angry With KCR Govts, Over 200 Farmers File Nominations in Nizamabad

தெலுங்கானா, ஆந்திரா உள்பட 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 11ம் தேதி முதல்கட்டமாக மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு வேட்பு மனுதாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 மக்களவை தொகுதிகளில் போட்டியிட சுமார் 700 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் சந்திரசேகர ராவ் மகள் கவிதா போட்டியிடும் நிஜாமாபாத் தொகுதியில் மட்டும் 245 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

"ஒரு பைசா லஞ்சம் வாங்கட்டும்.. விஷ ஊசி போட்டு கொன்று விடுவோம்".. சீமான் அதிரடி அட்டாக்!

இதில் சுமார் 200 பேர் மஞ்சள் மற்றும் சோளம் விளைவிக்கும் விவசாயிகள் ஆவா். தங்கள் விளைபொருட்களுக்கு கட்டுபடியாகக்கூடிய உரிய விலையினை பெற்று தர சந்திரசேகர் ராவ் அரசு தவறிவிட்டதாக கூறி விவசாயிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதனால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிர்ச்சி அடைந்துள்ளார். இவ்வளவு பேர் ஒரே தொகுதியில் போட்டிடுவதால் தேர்தல் ஆணையத்துக்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பழைய மிஷின்களில் ஓரளவுக்கே வேட்பாளர்களை சேர்க்க முடியும் எனவே நிஜாமாபாத்துக்காக புதிய மிஷின்களை இறக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

English summary
Angry With KCR Govts, Over 200 Farmers File Nominations in Nizamabad, KCR daughter Kavitha contest this constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X