ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆந்திராவில் அதளபாதளத்துக்கு சென்ற டிடிபி... முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சந்திரபாபு நாயுடு!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி படுதோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுடனே சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது.

இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்ற நடைபெற்றது. இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சி அபார வெற்றி பெற்றுள்ளது.

4 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை தட்டிவிட்ட அமமுக 4 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை தட்டிவிட்ட அமமுக

ஜெகன் அமோக வெற்றி

ஜெகன் அமோக வெற்றி

லோக்சபா மற்றம் சட்டசபை இரண்டு தேர்தல்களிலும் தெலுங்குதேசம் கட்சியை விரட்டியடித்துள்ளது ஒய்எஸ்ஆர்சி. 175 சட்டசபை தொகுதிகளில் 152 தொகுதிகளை கைப்பற்றிருக்கிறது ஜெகனின் கட்சி.

ஜன சேனாவுக்கு ஒரு இடம்

ஜன சேனாவுக்கு ஒரு இடம்

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 22 மட்டுமே கைப்பற்றியுள்ளது. பவன் கல்யானின் ஜன சேனா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஜஸ்ட் மிஸ் ஆகி மாஸ் வெற்றி பெற்ற பாரிவேந்தர்.. கடைசி நேர அதிரடியால் எம்.பி. ஆன அதிசயம்!ஜஸ்ட் மிஸ் ஆகி மாஸ் வெற்றி பெற்ற பாரிவேந்தர்.. கடைசி நேர அதிரடியால் எம்.பி. ஆன அதிசயம்!

மும்முரம்

மும்முரம்

நாடாளுமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர்சி 22 இடங்களையும் தெலுங்கு தேசம் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இந்த தோல்வியை சற்றும் எதிர்பார்க்காத சந்திரபாபு நாயுடு மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க மும்முரமாக இருந்தார்.

துடைத்தெறியப்பட்டுள்ளது

துடைத்தெறியப்பட்டுள்ளது

டெல்லி, கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் என மாநிலம் மாநிலமாக சென்று அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வந்தார். இந்நிலையில் அவரது கட்சி நடந்து முடிந்த 2 தேர்தல்களிலும் ஜெகன் மோகன் ரெட்டியால் துடைத்தெறியப்பட்டுள்ளது.

அமமுகவுக்கு பெரம்பூரில் கிடைத்த பேரதிர்ச்சி.. வெற்றிவேலை வீழ்த்திய மநீம, நாம் தமிழர்!அமமுகவுக்கு பெரம்பூரில் கிடைத்த பேரதிர்ச்சி.. வெற்றிவேலை வீழ்த்திய மநீம, நாம் தமிழர்!

சந்திரபாபு நாயுடு ராஜினாமா

சந்திரபாபு நாயுடு ராஜினாமா

இந்நிலையில் தனது முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்துள்ளார். இன்று அம்மாநில ஆளுநரை சந்தித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

English summary
AP CM Chandra babu Naidu resigns. Chandrababu naidu given resignation letter to AP Governor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X