ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவங்க மென்டாலிட்டியே இதுதான்.. ஆச்சரியப்பட ஒன்னுமில்லை.. பாஜவை விளாசும் ஒவைசி!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கர்நாடக கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா, கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் , பாஜக இந்துக்களுக்கு மட்டுமே டிக்கெட் கொடுக்கும், முஸ்லிம்களுக்கு டிக்கெட் கொடுக்காது என சர்ச்சையாக பேசியதை ஏஐஎம்எம் கட்சி தலைவர் ஆசாவுதீன் ஓவைசி கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக பதிலடி கொடுத்துள்ள ஏஐஎம்எம் கட்சி தலைவர் ஆசாவுதீன் ஒவைசி இது மிகவும் வெட்கக்கேடானது, அருவருப்பு மிக்கது என்றார். இது தனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்றும், பாஜக முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளித்தால்தான் ஆச்சரியம் என்றும் அவர் தெரிவித்தார். கே.எஸ். ஈஸ்வரப்பாவின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Asaduddin Owaisi attack On karntaka minster for no muslim controversy

சில தினங்களுக்கு முன்பு கர்நாடக கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா, தேர்தலில் போட்டியிட பாஜக இந்துக்களுக்கு டிக்கெட் கொடுக்கும், முஸ்லிம்களுக்கு டிக்கெட் கொடுக்காது என்று சர்ச்சை கருத்து தெரிவித்தார்.

அவருக்கு ஐஎம்எம் கட்சி தலைவர் ஆசாவுதீன் ஒவைசி, பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது:-கே.எஸ். ஈஸ்வரப்பாவின் இந்த கருத்து வெறுக்கத்தக்கது. வெட்கக்கேடானது, ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பாஜக முஸ்லிம்களுக்கு டிக்கெட் கொடுக்கும் என்று கூறினால்தான் ஆச்சரியம்.

ஒரு சமூகத்திற்கு மட்டுமே அரசியல் அதிகாரம் உண்டு. மற்றவர்கள் அனைவரும் அடிபணிந்தவர்கள் என்றும் இந்துத்துவா நம்புகிறது. இந்த சித்தாந்தம் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் நீதியை பேசும் நமது அரசியலமைப்போடு இணைந்திருக்க முடியாது என்று ஆசாவுதீன் ஒவைசி தெரிவித்தார்.

இதேபோல் கர்நாடக அமைச்சரின் கருத்துக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைத்தளத்திலும் கண்டனம் வலுத்து வருகிறது.

English summary
In the Karnataka local body elections, the BJP will give tickets only to Hindus and not to Muslims. Easwarappa said. In response, Azawuddin Owaisi said it was shameful and disgusting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X