ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெய் ஸ்ரீராம் படுகொலைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் பொறுப்பு... அசாதுதீன் ஓவைசி கடும் தாக்கு

Google Oneindia Tamil News

ஹைதராபாத்; ஜெய் ஸ்ரீராம் முழக்கங்களை எழுப்பாதவர்களை படுகொலை செய்யும் சம்பவங்களுக்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.தான் பொறுப்பேற்க வேண்டும் என மஜ்லீஸ் கட்சி தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கடுமையாக சாடியுள்ளார்.

ஜார்க்கண்ட்டில் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை எழுப்பாத 24 வயது இளைஞரை இந்துத்துவா கும்பல் படுகொலை செய்தது. தேசத்தையே இச்சம்பவம் உலுக்கியிருக்கிறது. ஜெய் ஸ்ரீராம், வந்தே மாதரம் முழக்கங்களை எழுப்ப மறுக்கும் தலித்துகள், சிறுபான்மையினர் கொடூரமாக தாக்கப்பட்டு ஒரு அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

Asaduddin Owaisi blames RSS for Hate Crimes

இது குறித்து அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:

ஜெய் ஸ்ரீராம் படுகொலைகள் குறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார். ஆனால் அவரால் பேசத்தான் முடியும். அதை தடுத்துவிட முடியாது.

முஸ்லிம்களுக்கு எதிராக பொதுமக்களை தூண்டிவிடும் நோக்கத்தில்தான் இத்தகைய சம்பவங்களை நடத்துகின்றனர். இத்தகைய வெறுப்பு அரசியலுக்கும் படுகொலைகளுக்கும் காரணமே பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான்.,

இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முழு காரணம் அந்த ஆரஞ்சு நிறம்தான்.. மெகபூபா முஃப்தி இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முழு காரணம் அந்த ஆரஞ்சு நிறம்தான்.. மெகபூபா முஃப்தி

ஜெய் ஸ்ரீராம் மற்றும் வந்தே மாதரம் முழக்கங்களை எழுப்ப மறுப்போர் மீதான தாக்குதல்கள் தொடரத்தான் போகிறது. முஸ்லிம்களும் தலித்துகளும் இலக்கு வைத்து தாக்கப்படுகின்றனர். சங்க பரிவார அமைப்புகள்தான் இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு ஓவைசி கூறினார்.

அண்மையில் லோக்சபாவில் ஓவைசி எம்.பி.யாக பதவியேற்ற போது பாஜக எம்.பிக்கல் ஜெய் ஸ்ரீராம், வந்தே மாதரம் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக ஜெய் பீம், ஜெய் மீம், தக்பீர் அல்லாஹூ அக்பர், ஜெய் ஹிந்த் என முழங்கினார் ஓவைசி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
All India Majlis-e-Ittehadul Muslimeen party president and Asaduddin Owaisi has blamed that the RSS for Hate Crimes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X