ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரயிலில் சிவனுக்கு மினி கோயில்.. பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி போட்ட பரபரப்பு டுவிட்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: வாரணாசி இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவபெருமானுக்கு சீட் ஒதுக்கியது ஏன் என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார். அரசியல் அமைப்பு நூலின் முகப்பு பக்கத்தை டேக் செய்துள்ள ஓவைசி, ரயிலில் மினி கோயில் சிவபெருமானுக்கு உள்ள செய்தியும் சுட்டிக்காட்டி உள்ளார்.

வாரணாசி -இந்தூர் இடையில் காசி-மகாகல் எக்ஸ்பிரஸ் ரயிலை நேற்று வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளால் ஆன இந்த ரயிலில் கோச் நம்பர் பி 5ல் சீட் நம்பவர் 64 பெர்த்தை கடவுள் சிவபெருமானுக்கு அப்பர் பெர்த் சீட்டை வடக்கு ரயில்வே ஒதுக்கி உள்ளது.

 Asaduddin Owaisi tweets to PMO over berth for Lord Shiva in Kashi-Mahakal Express

வடக்கு ரயில்வேயின் செய்தி தொடர்பாளர் தீபக் குமாரும் தெய்வத்திற்காக ரயில்வே பெர்த் சீட்டை ஒதுக்கியதை உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், " ரயிலில் சிவபெருமானுக்கு ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டு காலியாக விடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் மகாகலுக்கு இறைவன் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஒரு கோயில் கூட இருக்கையில் வரையப்பட்டுள்ளது" என்றார்.

இந்நிலையில் ரயிலில் மினி கோயில் சிவபெருமானுக்கு உள்ள செய்தியின் டுவிட்டை டேக் செய்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசி, இது குறித்து பிரதமர் மோடியின் கவனத்திற்கு உள்ளதா என்பதை குறிக்கும் வகையில் கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன் அரசியல் அமைப்பு நூலின் முகப்பு பக்கத்தையும் அதில் இணைத்துள்ளார்.

English summary
Varanasi: Seat number 64 of coach B5 in Kashi Mahakal Express (Varanasi-Indore) has been turned into a mini-temple of Lord Shiva.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X