ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவாக்சின்.. வாய்ப்பே இல்லை.. ஆகஸ்ட் 15ல் பயன்பாட்டிற்கு வராது.. பாரத் பயோடெக் கொடுத்த விளக்கம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: பாரத் பயோடெக் நிறுவனம் உலகையே அச்சுறுத்தும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தது. மனிதர்களுக்கும் சோதித்து பார்க்கப்பட்டது. இதில் பக்கவிளைவுகள் இல்லை என்று அறிவித்தது. இதனால் இந்நிறுவனம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தடுப்பூசியை அறிமுகம் செய்யப்பட போவதாக பல சமூக ஊடக பதிவுகள் வெளியாகின. ஆனால் ஆகஸ்ட் 15 ஆம் கொரோனா தடுப்பூசி தொடங்கப்படாது என்று பாரத் பயோடெக் விளக்கம் அளித்துள்ளது.

Recommended Video

    World’s First Covid-19 Vaccine will be Registered by Russia | Oneidia Tamil

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸுக்கு எதிரான கோவாக்ஸின் என்ற பெயரில் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

    இந்தத் தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்தாகும். இந்த மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் முயற்சி நடந்து வருகிறது. சண்டிகரின் ரோடக் நகரில் உள்ள உயர்நிலை மருத்துவஅறிவியல் கல்வி நிறுவனத்தில் பரிசோதனை நடந்து வருகிறது.

    கொரோனா பீதி மக்களை வாட்டி வதைக்கிறது... விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு தோல்வி -கே.எஸ்.அழகிரி கொரோனா பீதி மக்களை வாட்டி வதைக்கிறது... விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு தோல்வி -கே.எஸ்.அழகிரி

    கோவாக்ஸின் சோதனை

    கோவாக்ஸின் சோதனை

    அண்மையில் கோவாக்ஸின் மருந்து முதல்கட்டமாக 3 மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. இதில். எந்த எதிர்மறையான விளைவும் ஏற்படவில்லை. இந்த பரிசோதனை 6 மாதங்கள் வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுளள்து. முதல் 3 மாதங்கள் கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் தன்மை குறித்தும், உடலில் எவ்வாறு நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்குகிறது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. உடலில் மருந்து அளித்த பின்னர். ஏதாவது எதிர்மறையான விளைவுகள் உண்டாக்குகிறதா என பரிசோதிக்கப்பட உள்ளது. இந்த பரிசோதனைக்கு 30 வயது முதல் 40 வயதுள்ள நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    தடுப்பூசி தொடங்கப்படாது

    தடுப்பூசி தொடங்கப்படாது

    இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம்தேதி முதல் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அறிமுகம் போவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இதை பாரத் பயோடெக் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சமீபத்தில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் இயக்குனர் கிருஷ்ணா எலா கூறுகையில், தடுப்பூசியை உருவாக்க எங்களுக்கு கடுமையான அழுத்தம் உள்ளது. ஆனால் எங்களைப் பொறுத்தவரை, பாதுகாப்பும் தரமும் மிக முக்கியமானது. தவறான தடுப்பூசி மூலம் அதிகமானவர்களைக் கொல்ல நாங்கள் விரும்பவில்லை.

    குறுகிய பார்வை இல்லை

    குறுகிய பார்வை இல்லை

    நாங்கள் மிக உயர்ந்த தரங்களைப் பற்றிய மருத்துவ ஆராய்ச்சி செய்ய விரும்புகிறோம், சர்வதேச முகவர் மற்றும் சமூகங்களால் நாங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளோம். இது நாட்டிற்கும் எங்களுக்கும் மதிப்புமிக்க விஷயம். நாங்கள் ஆராய்ச்சியில் குறுகிய பார்வை பெற மாட்டோம், மேலும் சிறந்த தரமான தடுப்பூசியை உருவாக்குவோம் . மருத்துவ பரிசோதனைகள் முடிவடையும் நேரம் எவ்வாறு கால அளவைப் பொறுத்து தடுப்பூசி வெளியாகும். கோவாக்சினுக்கு மாறாக ரோட்டா வைரஸ் ஒரு கட்டத்தை முடிக்க ஆறு மாதங்கள் எடுக்கும் முதல்கட்டத்திற்கு, 20 நாட்கள் மட்டுமே எடுத்து இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. "நாங்கள் ஜி.எஸ்.கே அல்லது சனோஃபி (உலகளாவிய மேஜர்கள்) ஐ விட குறைவாக இல்லை. இந்திய நிறுவனங்களின் திறன்கள் குறித்து பலருக்கு சந்தேகம் உள்ளது. தொற்றுநோயை எதிர்த்து தாக்கும் தந்திர யுக்தியை உருவாக்குவதே முக்கியம்.

    பொருளாதாரத்தை அழித்தது காரணம்

    பொருளாதாரத்தை அழித்தது காரணம்

    தொற்றுநோய் இவ்வளவு கவனத்தை ஈர்த்தது, அது ஏற்படுத்துவதற்கு மரணங்கள் காரணமாக அல்ல. ஆனால் அது பொருளாதாரத்தை அழித்ததால் தான் இந்த அளவிற்கு பேசப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொரு அரசியல்வாதியும் அதிகார மையங்களும் இதைப் பற்றி பேசுகிறார்கள். கோவிட்டை விட அதிகமான மக்கள் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர். மக்கள் இதில் சித்தப்பிரமை பெறக்கூடாது, ஏனெனில் இது மற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    நிறுவனத்தின் சொந்த காசு

    நிறுவனத்தின் சொந்த காசு

    இந்த மருந்துக்காக ஒரு ரூபாய் கூட அரசாங்கத்திடமிருந்து வாங்கப்படவில்லை. என்றும், அனைத்து முதலீடுகளும் நிறுவனத்தின் சொந்தப் பணத்திலிருந்தே செய்யப்பட்டுள்ளது. இதை இந்திய நிறுவனத்தாலும் செய்ய முடியும். இந்த (கோவிட்) தடுப்பூசியை நாங்கள் அனைவருக்கும் மிகவும் மலிவு மற்றும் அணுகக்கூடியதாக மாற்றுவோம்." இவ்வாறு கிருஷ்ணா எலா (தமிழகத்தைச் சேர்ந்தவர்) கூறினார்.

    English summary
    many social media posts claimed that indian coronavirus vaccine is going to be launched on August 15th, Bharat Biotech clarified that it was not a deadline.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X