ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகாரில் அத்தனை பெரிய கட்சிகளும் தீண்டதகாதவர்களாக நடத்தின- 'கிங் மேக்கராக' உருவெடுத்த ஓவைசி

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: பீகார் மாநில அனைத்து பெரிய அரசியல் கட்சிகளுமே மஜ்லிஸ் கட்சியை தீண்டத்தகாத கட்சியாகவே நடத்தின என அதன் தலைவர் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார்.

பீகார் சட்டசபைலில் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் 4 அல்லது 5 இடங்களில் வெற்றி பெற்று கிங் மேக்கராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜேடியூவின் வெற்றி பெறும் இடங்களை குறைக்க வேண்டும் என்ற பாஜகவின் அஜெண்டாவை வெற்றிகரமாக செயல்படுத்திவிட்டதுடன் எல்ஜேபியின் பங்களிப்பு முடிந்துவிட்டது. அந்த கட்சி 1 இடத்தில்தான் வென்றுள்ளது.

நின்றதே பிரிக்கத்தானே.. 5.70% வாக்குகள் பெற்றும்.. ஒரே ஒரு தொகுதியில் வென்ற சிராக் பாஸ்வான் கட்சி!நின்றதே பிரிக்கத்தானே.. 5.70% வாக்குகள் பெற்றும்.. ஒரே ஒரு தொகுதியில் வென்ற சிராக் பாஸ்வான் கட்சி!

ஓவைசி கிங் மேக்கர்

ஓவைசி கிங் மேக்கர்

பீகார் சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி இதுவரை 4 தொகுதிகளில் வென்றுள்ளது. 1 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. இதனால் ஓவைசி, பீகாரில் கிங் மேக்கராக உருவெடுத்திருக்கிறார்.

தவறுகளில் இருந்து பாடம்

தவறுகளில் இருந்து பாடம்

ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் ஆட்சி அமைக்க இப்போதைய நிலையில் மஜ்லிஸ் கட்சியின் தயவு தேவை என்கிற நிலை உள்ளது. இதனிடையே பீகார் தேர்தல் வெற்றி குறித்து ஓவைசி கூறியதாவது: அரசியலில் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். மஜ்லிஸ் கட்சியின் பீகார் தலைவர் ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஏறெடுத்து பார்க்கவில்லை

ஏறெடுத்து பார்க்கவில்லை

ஆனால் எந்த ஒரு கட்சியும் எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பீகாரின் பெரிய கட்சிகள் தீண்டதாகவர்களாக நடத்தின. எங்களது கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு முஸ்லிம் தலைவரையும் சந்தித்தும் பேசினர். ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. எதற்காக இப்படி நடந்தது என்பதை எல்லாம் என்னால் விவரிக்க முடியாது.

பீகார் மக்களுக்கு நன்றி

பீகார் மக்களுக்கு நன்றி

மஜ்லிஸ் கட்சிக்கு இன்றைய நாள் மிக மகிழ்ச்சியான நாள். பீகார் மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆசீர்வதித்திருக்கின்றனர். பீகார் மக்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன் என தெரியவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்காக நாங்கள் பெருமளவில் உதவி செய்தோம். இவ்வாறு ஓவைசி கூறினார்.

English summary
AIMIM Party Chief Asaduddin Owaisi said that Bihar Political Parties Treated Like Untouchable during the Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X