ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்க கிராமத்துக்கு செய்யணும்னா உங்க பணத்துல செய்யுங்க - தெலுங்கானா முதல்வருக்கு எதிர்ப்பு

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது சொந்த ஊர் மக்களுக்கு அதிரடியாகப் பல சலுகைகளை அறிவித்துள்ளார், இந்த அறிவிப்புகள் தெலுங்கானா மாநிலத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வருடம் தனது ஆட்சியையே கலைத்துவிட்டு மக்களவை தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலை சந்தித்த சந்திரசேகர ராவ் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தார். தனது சொந்த மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கே.சி.ஆர் நேற்று தனது சொந்த ஊரான சிந்தமடகாவுக்கு சென்றார்.

BJP condemns Telangana CM for extending welfares for his native village

அங்கு தனது பழைய நண்பர்கள், உறவினர்கள், மற்றும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திர சேகரராவ் அந்தக் கிராமத்தில் உள்ள 2000 குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஆஹான்.. யாரு இவரு.. நம்ம புதுவை முதல்வர் நாராயணசாமியா இது.. அப்படியே சும்மா கும்முனு இருக்காரே! ஆஹான்.. யாரு இவரு.. நம்ம புதுவை முதல்வர் நாராயணசாமியா இது.. அப்படியே சும்மா கும்முனு இருக்காரே!

அரசு தரும் இந்த பணத்தை விவசாய பணிகளுக்கோ, தொழில் தொடங்கவோ மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார். இதற்காக அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இதற்காக மொத்த ரூ. 400 கோடி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சித்தபேட் மாவட்டத்தின் சிந்தமடகா கிராமத்தில் உள்ள 2,000 குடும்பங்களுக்கும் உடனே நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தான் பிறந்த கிராம மக்களுக்கு உதவ வேண்டியது தன் கடமை என்று சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள், பொதுநிலையினர் என பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனது சொந்த ஊருக்கு பெரிய அளவில் உதவி செய்வதென்றால் தனது பணத்திலிருந்து செய்ய வேண்டும் என பலதரப்பினரும் கூறிவருகின்றனர். அதோடு சந்திரசேகர ராவ் முதல்வர் போல அல்லாமல் கிராம தலைவர் போல செயல்படுகிறார் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

அவரது இந்த பேச்சு பொதுமக்களிடையேயும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிந்தமடகாவைவிட பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால், கே.சி.ஆர் சுயநலமாகத் தனது சொந்த ஊர் மக்களை மட்டும் முன்னேற்ற இப்படிச் செய்கிறார் என எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2000 குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் தலா 10 லட்ச ரூபாய் என்ற அறிவிப்போடு ஹாஸ்டல்கள், சாலைகள் ஆகியவை அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் சந்திர சேகர ராவ் அறிவித்துள்ளார். அதோடு இந்த பணிகளை கவனிக்கும் பொறுப்பை தனது மருமகனும் எம்.எல்.ஏ-வுமான ஹரிஷ் ராவிடம் ஒப்படைத்துள்ளார்.

சந்திரசேகர ராவ் தனது சொந்த ஊர் மக்களுக்கு அள்ளி, அள்ளி கொடுக்க வேண்டும் என்றால் தனது சொந்தப் பணத்தில் செய்ய வேண்டியதுதானே என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

English summary
BJP condemns Telangana CM Chandra sekara rao for extending welfares for his native village.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X