ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்மலா சீதாராமனின் கையெழுத்து மூலம் ஏமாற்றிய சவுக்கிதார் முரளிதரராவ்?.. பல கோடி மோசடி.. வழக்கு!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி மோசடி செய்ததாக பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்மலா சீதாராமனின் கையெழுத்து மூலம் முரளிதரராவ் மோசடி செய்தாரா?- வீடியோ

    ஹைதராபாத்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி மோசடி செய்ததாக பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

    பாஜக கட்சிக்கு தற்போது புதிய தலைவலியாக , கட்சியின் தேசிய பொதுச்செயலாளரே மோசடி வழக்கில் சிக்கி இருக்கிறார். பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட 9 பேர் மீது ஹைதராபாத் போலீசில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

    மஹிபால் ரெட்டி என்ற நபருக்கு முரளிதர ராவ் வேலை வாங்கி தருவதாக கூறி 2.1 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாக புகாரில் கூறப்பட்டு இருக்கிறது.

    எந்த செயற்கைகோள்.. யார் அனுப்பிய செயற்கைகோள்.. விடைகிடைக்காத கேள்விகள்.. பதில் சொல்லுங்க சார்! எந்த செயற்கைகோள்.. யார் அனுப்பிய செயற்கைகோள்.. விடைகிடைக்காத கேள்விகள்.. பதில் சொல்லுங்க சார்!

    என்ன நடந்து இருக்கிறது

    என்ன நடந்து இருக்கிறது

    பாஜகவை சேர்ந்த ஈஸ்வர் ரெட்டி என்ற நபர், ஹைதராபாத்தில் வசித்து வரும் மஹிபால் ரெட்டி மற்றும் அவரின் மனைவி ப்ரவர்ணா ரெட்டி ஆகியோருக்கு வேலை வாங்கி தருவதாக சில மாதங்களுக்கு முன் அணுகி இருக்கிறார். மத்திய அரசின் வர்த்தக துறையில் வேலை வாங்கித்தரப்படும் என்று கூறியுள்ளார்.

    பணம்

    பணம்

    இந்த நிலையில் பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவையும் இவர்களுக்கு ஈஸ்வர் அறிமுகம் செய்துள்ளார். இதையடுத்து வேலை வாங்கி தருவதாக ரூபாய் 2.1 கோடி இவர்களிடம் இருந்து வாங்கப்பட்டு இருக்கிறது. வேலை வாங்கி கொடுப்பதற்கான பத்திரத்தையும் இவர்களிடம் கொடுத்துள்ளனர்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    அதேபோல் வேலைக்கான அப்பாயின்மென்ட் கடிதத்தையும் மத்திய வர்த்தக அமைச்சகத்தில் இருந்து பெற்று தந்துள்ளனர். இதில் அப்போதைய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையெழுத்தும் இருந்துள்ளது. ஆனால் மஹிபால் ரெட்டிக்கு எந்த விதமான வேலையும் கடைசி வரை வாங்கி தரப்படவில்லை. இதில் இருக்கும் கையெழுத்தும் நிர்மலா சீதாராமனின் கையெழுத்து இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    வழக்கு

    வழக்கு

    இதையடுத்து தற்போது மஹிபால் மற்றும் அவரது மனைவி ப்ரவர்ணா இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மோசடி, போர்ஜரி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட 9 பேர் மீது ஹைதராபாத் போலீசில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதில் முரளிதர ராவ் நேரடியாக ஈடுப்பட்டு இருப்பதால் அவரும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். பாஜக கட்சியினருக்கு இது பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.

    English summary
    BJP Gen.Sec Muralidhar Rao booked for allegedly forging Nirmala Sitharaman’s signature to cheat Rs .2.1 Crore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X